செய்திகள்

உடல்நலக்குறைவால் முதல் ஒருநாள் ஆட்டத்திலிருந்து மிட்செல் மார்ஷ் விலகல்! புதிய வீரர் சேர்ப்பு!

உடல்நலக் குறைவால் கடந்த இருநாள்களாக ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் மருத்துமனையில்...

எழில்

உடல்நலக் குறைவால் கடந்த இருநாள்களாக ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து முதல் ஒருநாள் ஆட்டத்திலிருந்து அவர் விலகியுள்ளார். 

இந்நிலையில், பெர்த் ஸ்கார்சர்ஸ் பேட்ஸ்மேனான ஆஷ்டன் டர்னர், மார்ஷுக்குப் பதிலாக ஆஸி. அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டுக்கு அவர் புதிதாக அறிமுகமாகவுள்ளார். முதல் ஒருநாள் ஆட்டம் சனிக்கிழமையன்று சிட்னியில்  நடைபெறவுள்ளது. 

ஆஷ்டன் டர்னர் குறித்து ஆஸி. பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் கூறியதாவது: கடைசி ஓவர்களில் ஆஷ்டன் டர்னர் சிறப்பாக விளையாடுவார். மைக்கேல் பவன், மைக்கேல் ஹஸ்ஸி போல வேகமாக ஓடி ரன் எடுக்கும் திறன் கொண்டவர். அருமையான ஃபீல்டரும்கூட. எனவேதான் அவரைத் தேர்வு செய்துள்ளோம். மிட்செல் மார்ஷின் உடல்நலத்தை ஆராய்ந்த பிறகு கடைசி இரு ஒருநாள் ஆட்டங்களில் அவரைச் சேர்த்துக்கொள்ளப்படுவது குறித்து முடிவெடுக்கப்படும் எனக் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விக்கிரவாண்டி அருகே கார் தீப்பிடித்ததில் 3 பேர் பலி!

காந்தி பாதையைத் தொடர்ந்து பின்பற்றுவோம்! மோடி

பாகிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்!

ஆசியக் கோப்பையை ஐக்கிய அமீரகத்திடம் ஒப்படைத்தார் நக்வி!

மியான்மரில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.1 ஆகப் பதிவு

SCROLL FOR NEXT