செய்திகள்

அம்பத்தி ராயுடு பந்துவீச்சுக்கு செக்? 14 நாட்களில் நடவடிக்கை: ஐசிசி அறிவிப்பு

அம்பத்தி ராயுடு பந்துவீச்சு தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரில் 14 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என ஐசிசி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

Raghavendran

அம்பத்தி ராயுடு பந்துவீச்சு தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரில் 14 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என ஐசிசி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் முதல் போட்டி சிட்னியில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றது. 

இந்நிலையில், இப்போட்டியில் அம்பத்தி ராயுடு பந்துவீச்சு முறை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போட்டி நடுவர்கள் ஐசிசி-யிடம் புகார் அளித்தனர். இந்தப் புகார் தொடர்பாக இந்திய அணிக்கும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து அம்பத்தி ராயுடு-வின் பந்துவீச்சு முறை குறித்து பரிசோதிக்கப்படும். 14 நாட்களுக்குள்ளாக அவர் இந்த பரிசோதனையில் பங்கேற்க வேண்டும். பரிசோதனை முடிவுகள் வெளியாகும் வரை சர்வதேச கிரிக்கெட்டில் அம்பத்தி ராயுடு தொடர்ந்து பந்துவீசலாம் என ஐசிசி தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

தவறுதலாக 43 ஆண்டுகள் சிறை! இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரை நாடு கடத்தத் தடை

அடியே, அலையே! பராசக்தி முதல் பாடல் புரோமோ!

ஹிந்துஜா குழுமத் தலைவர் கோபிசந்த் காலமானார்

SCROLL FOR NEXT