முகப்பு
செய்திகள்

துளிகள்...

Updated On : 24 ஜனவரி 2019, 1:08 am IST
பகிர்:


 ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட்டில் முதலாவது அரையிறுதி ஆட்டம் கேரள மாநிலத்தில் வியாழக்கிழமை தொடங்குகிறது. இதில் விதர்பா, கேரள அணிகள் மோதுகின்றன. இதேபோல், பெங்களூரில் சௌராஷ்டிரா, கர்நாடகம் ஆகிய அணிகளுக்கு இடையே 2ஆவது அரையிறுதி ஆட்டம் வியாழக்கிழமை தொடங்குகிறது.


 நியூஸிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, அந்நாட்டு அணிக்கு எதிராக முதல் ஒரு நாள் ஆட்டத்தில் வியாழக்கிழமை மோதுகிறது.


 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் 2 முறை தங்கம் வென்ற இந்திய பளுதூக்குதல் வீராங்கனை கே.சஞ்சிதா சானுவுக்கு போட்டிகளில் பங்கேற்க விதிக்கப்பட்டிருந்த தடையை சர்வதேச பளுதூக்குதல் கூட்டமைப்பு திரும்பப் பெற்றது. ஊக்கமருந்து சோதனையில் சிக்கியதை அடுத்து அவருக்குத் தடை விதிக்கப்பட்டது. எனினும், அவர் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்திருந்தார்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.