செய்திகள்

சிக்ஸரால் தாக்கப்பட்ட ரசிகைக்கு ஆட்டோகிராஃபுடன் கூடிய தொப்பி வழங்கிய ஹிட்மேன்

Raghavendran

2019 உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் இந்தியா, வங்கதேசம் அணிகள் செவ்வாய்கிழமை மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது. 

இப்போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டன் 'ஹிட்மேன்' ரோஹித் ஷர்மா அபாரமாக ஆடி சதம் விளாசினார். 92 பந்துகளில் 7 பவுண்டரி, 5 இமாலய சிக்ஸர்களுடன் 104 ரன்களைக் குவித்தார். 

போட்டியின் போது ரோஹித் ஷர்மா பறக்கவிட்ட ஒரு சிக்ஸர் மைதானத்தில் இருந்த தீவிர இந்திய கிரிக்கெட் ரசிகையான மீனா என்பவர் மீது விழுந்தது. இந்நிலையில், போட்டி முடந்த பின்னர் அந்த ரசிகையை சந்தித்து நலம் விசாரித்த ரோஹித் ஷர்மா, அவருக்கு ஆட்டோகிராஃப் உடன் கூடிய தொப்பியை வழங்கி உற்சாகப்படுத்தினார்.

முன்னதாக, உலக கிரிக்கெட் கொண்டாடிய 87 வயது மூத்த ரசிகையான சாருலதா படேலை போட்டி முடிந்த பின்னர் கேப்டன் விராட் கோலி மற்றும் துணைக் கேப்டன் ரோஹித் ஷர்மா ஆகியோர் சந்தித்து ஆசிர்வாதம் பெற்றது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

SCROLL FOR NEXT