செய்திகள்

அரையிறுதியில் ஹேண்ட்ஸ்காம்ப் இடம்பெறுவது உறுதி: ஜஸ்டின் லேங்கர்

அரையிறுதி தொடர்பாக ஆஸ்திரேலிய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஜஸ்டின் லேங்கர் கூறுகையில்,

Raghavendran

2019 உலகக் கோப்பை போட்டித் தொடரில் லீக் சுற்றுகளின் முடிவில் 14 புள்ளிகளுடன் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி 2-ஆம் இடம் பிடித்தது. இதையடுத்து 3-ஆம் இடம்பிடித்த இங்கிலாந்து அணியை 2-ஆவது அரையிறுதியில் எதிர்கொள்கிறது. 

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணி அடுத்தடுத்த வீரர்களின் காயம் காரணமாக சற்று பின்னடைவை சந்தித்துள்ளது. குறிப்பாக நடுவரிசையில் இடம்பெற்றுள்ள ஷான் மார்ஷ் மற்றும் உஸ்மான் கவாஜா ஆகியோர் காயம் காரணமாக அணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர். 

அரையிறுதி தொடர்பாக ஆஸ்திரேலிய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஜஸ்டின் லேங்கர் கூறுகையில்,

மாற்று வீரராக இடம்பெற்றுள்ள பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப், இங்கிலாந்துடனான அரையிறுதியில் நிச்சயம் இடம்பெறுவார். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். இதனால் ஆஸ்திரேலிய அணிக்கு எந்த அழுத்தமும் இல்லை என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

சாலை மறியல் போராட்டம் வாபஸ்

சீா்காழி: வாகனத்தில் டீசல் திருட்டு

SCROLL FOR NEXT