செய்திகள்

ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியத்துக்கு இடைக்காலத் தடை: ஐசிசி நடவடிக்கை

ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியத்துக்கு இடைக்காலத் தடை விதித்து ஐசிசி வியாழக்கிழமை நடவடிக்கை எடுத்துள்ளது. 

Raghavendran

ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியத்துக்கு இடைக்காலத் தடை விதித்து ஐசிசி வியாழக்கிழமை நடவடிக்கை எடுத்துள்ளது. அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தில் அரசு தலையீடு இருப்பதாகக் கூறி லண்டனில் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து சர்வதேச கிரிக்கெட் கௌன்சில் (ஐசிசி) தலைவர் சஷாங்க் மனோகர் கூறுகையில்,

ஒரு சர்வதேச கிரிக்கெட் அணிக்கு எதிராக அவசர நிலையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படுவது கிடையாது. கிரிக்கெட்டில் அரசு தலையீடு இருக்கக் கூடாது என்பதில் ஐசிசி உறுதியாக உள்ளது. ஆனால், ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியத்தில் மிகப்பெரிய அளவில் அரசின் தலையீடுகள் உள்ளன. கிரிக்கெட் நிர்வாகம் மற்றும் அணித் தேர்வுகளில் பாரபட்சம் காட்டப்படுகின்றன. 

எனவே ஐசிசியின் கொள்கையின் அடிப்படையில் ஒரு நாட்டின் கிரிக்கெட் வாரியத்தில் அரசு தலையீடு இருப்பதை விரும்பவில்லை. அதனால் ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியத்துக்கு இடைக்காலத் தடை விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கான நிதியுதவி உடனடியாக நிறுத்தப்படுகிறது.

விதிகளின் அடிப்படையில் மட்டுமே ஜிம்பாப்வே கிரிக்கெட் தொடர வேண்டும் என ஐசிசி விரும்புகிறது என்று தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிப். 2-ல் விஜய் தலைமையில் தவெக ஆண்டு விழா!

வேலை செய்வதில் நீங்கள் எப்படிப்பட்டவர்கள்?

பனி போர்த்திய நகரமாய் மணாலி! கழுகுப் பார்வை காட்சி!

ஓபிஎஸ்ஸுடன் கூட்டணியா? நெல்லை தொகுதியில் போட்டியா? - நயினார் நாகேந்திரன் பதில்!

ஆண்ட பரம்பரை ரியல் மாட்ரிட் அணிக்கு அதிர்ச்சியளித்த பென்ஃபிகா..! ஸ்டாப்பேஜ் நேரத்தில் கோல் அடித்த கோல்கீப்பர்!

SCROLL FOR NEXT