செய்திகள்

இந்தோனேஷிய ஓபன் பாட்மிண்டன்: அரையிறுதியில் பி.வி.சிந்து

DIN


இந்தோனேஷிய ஓபன் பாட்மிண்டன் போட்டி மகளிர் ஒற்றையர் அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார் இந்தியாவின் நட்சத்திரம் பி.வி.சிந்து.

ஒலிம்பிக் பதக்கம் வென்ற சிந்து, வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தின் மூன்றாம் நிலை வீராங்கனை ஜப்பானைச் சேர்ந்த நúஸாமி ஒகுஹராவை 21-14, 21-7 என்ற கேம் கணக்கில் எளிதில் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றார். 

இந்த ஆட்டம் மொத்தம் 44 நிமிடங்களே நடைபெற்றது. அரையிறுதியில் சீனாவின் சென் யு ஃபெயை எதிர்கொள்கிறார் சிந்து.

ரஷிய ஓபன்: விளாடிவோஸ்டாக்கில் நடைபெற்று வரும் ரஷிய ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் மேக்னா ஜக்கம்புடி இரட்டையர் மகளிர் மற்றும் கலப்பு பிரிவில் அரையிறுதிக்கு தகுதி பெற்றார். 

கலப்பு இரட்டையரில் மேக்னா-கபிலா இணை 21-3, 21-12 என்ற கேம் கணக்கில் ரஷியாவின் மக்ஷிம்-ஏகடெரினா இணையை வென்றது.

மகளிர் இரட்டையரில் மேக்னா-பூர்விஷா இணை 21-19, 21-11 என்ற கேம் கணக்கில் உள்ளூர் இணை விக்டோரியா-மரியா சுகோவாவை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரோஜா பூ..!

ஸீரோ பேலன்ஸ்: சத்தீஸ்கர் பழங்குடிப் பெண் வேட்பாளர்

தேர்தலில் வடகிழக்கு மாநிலங்கள் முக்கியப் பங்காற்றும்: அசாம் முதல்வர்

அழுத்தமான சூழலில் சரியான முடிவுகளை எடுப்பவர் ரோஹித் சர்மா: யுவராஜ் சிங்

ராபா எல்லையில் இஸ்ரேல் டாங்கிகள்: அதிகரிக்கும் போர்ப் பதற்றம்!

SCROLL FOR NEXT