செய்திகள்

பத்திரிகையாளர்களை சந்திக்கிறார் விராட் கோலி: பிசிசிஐ உறுதி

பத்திரிகையாளர் சந்திப்பு தொடர்பாக ஏற்கனவே வெளியான தகவலை மறுக்கும் விதமாக பிசிசிஐ-யின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Raghavendran

பத்திரிகையாளர் சந்திப்பு தொடர்பாக ஏற்கனவே வெளியான தகவலை மறுக்கும் விதமாக பிசிசிஐ-யின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேற்கிந்திய தீவுகளுடனான 3 போட்டிகள் அடங்கிய டி20, ஒருநாள் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்கும் இந்திய அணி திங்கள்கிழமை புறப்படுகிறது.

இதையடுத்து ஒவ்வொரு தொடருக்கு முன்னதாகவும் இந்திய அணியின் கேப்டன், பத்திரிகையாளர்களை சந்திப்பது வழக்கம். ஆனால், இம்முறை பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெறாது என்று தகவல்கள் வெளியாகின. விராட் கோலி, ரோஹித் ஷர்மா இடையிலான கருத்து வேறுபாடு இதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என்று கூறப்பட்டது.

இந்நிலையில், மே.இ.தீவுகள் தொடருக்கு முன்பாக திட்டமிட்டபடி இந்திய கேப்டன் விராட் கோலி பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொள்வார் என்று பிசிசிஐ ஞாயிற்றுக்கிழமை உறுதிபடத் தெரிவித்தது.

முன்னதாக, அணி முடிவுகள் மற்றும் இரட்டை கேப்டன் பதவி உள்ளிட்ட சில முடிவுகள் காரணமாக இந்திய கேப்டன் விராட் கோலி மற்றும் துணைக் கேப்டன் ரோஹித் ஷர்மா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவித்தன. 

சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் விராட் கோலியை பின்தொடர்வதை ரோஹித் ஷர்மா நிறுத்தியதில் இருந்து இப்பிரச்னை பெரிதானது. ஆனால், அவ்வாறு கருத்து வேறுபாடு கிடையாது என பிசிசிஐ சிஓஏ தலைவர் வினோத் ராய் மறுப்பு தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்காவுடன் இடைக்கால வா்த்தக ஒப்பந்தம்: பேச்சுவாா்த்தை ஒத்திவைப்பு!

மாற்றம் பெறும் மதிப்பீட்டு முறை!

தமிழகத்தில் 2,506 முகாம்கள் மூலம் 3,09,707 பேருக்கு வேலைவாய்ப்பு!

தில்லியில் பயங்கரவாத தாக்குதல் சதி முறியடிப்பு: தமிழகத்தில் இருந்து 6 போ் உள்பட 8 போ் கைது!

இடையறா பயணத்தின் 'மைல்கல்' தேர்தல்!

SCROLL FOR NEXT