முகப்பு
செய்திகள்

உலகக் கோப்பை முடிந்ததும் நிறைய பேசவேண்டியுள்ளது: யுவராஜ் விளாசல்

இதுதான் சரியான தருணம். பல சம்பவங்கள் தொடர்பாக ஆலோசிக்க வேண்டியுள்ளது.

Updated On : 11 ஜூன், 2019 at 11:01 AM
பகிர்:
Updated On : 31 ஜனவரி, 2024 at 1:38 PM

ஓய்வு முடிவு அறிவித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய யுவராஜ் சிங் உலகக் கோப்பை முடியட்டும் பலது பேசவேண்டியுள்ளது என்று கூறினார். இதுதொடர்பாக அவர் பேசியதாவது:

நான் நிறைய பேசவேண்டியுள்ளது. அதற்கெல்லாம் இதுதான் சரியான தருணம். பல சம்பவங்கள் தொடர்பாக ஆலோசிக்க வேண்டியுள்ளது. ஆனால், தற்போதைக்கு நான் எதையும் பேச விரும்பவில்லை. ஏனென்றால் உலகக் கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. எனவே வீரர்களைச் சுற்றி எந்த சர்ச்சையையும் நான் ஏற்படுத்த விரும்பவில்லை.

உலகக் கோப்பையில் பங்கேற்றுள்ள வீரர்கள் நல்ல மனநிலையுடன் விளையாட வேண்டும் என்று விரும்புகிறேன். நாக்-அவுட் சுற்றுகளுக்கு இந்தியா முன்னேற வேண்டும்.

Advertisement

அதுபோன்று உலகக் கோப்பை நடைபெறும்போது நான் ஓய்வுபெறவில்லை. நான் எனது வாழ்வில் அடுத்தகட்டத்தை நோக்கி நகர வேண்டும் என்று விரும்பினேன். ஆகையால் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தற்போது ஓய்வு பெற்றுள்ளேன். 

சரியான நேரம் வரும்போது எனது கிரிக்கெட் வாழ்க்கை குறித்து நிறைய பேசவேண்டியுள்ளது என்று தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.