செய்திகள்

உலகக் கோப்பை தொடரில் இருந்து ஷிகர் தவன் விலகல்?

இந்திய அணியின் துவக்க வீரர் ஷிகர் தவன் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து செவ்வாய்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Raghavendran

இந்திய அணியின் துவக்க வீரர் ஷிகர் தவன் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து செவ்வாய்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை லீக் சுற்று ஆட்டத்தில் இந்திய அணியின் துவக்க வீரர் ஷிகர் தவன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் விளாசினார். இந்திய அணி இப்போட்டியில் 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இதனிடையே போட்டியின் போது நாதன் கௌடர் நைலின் பௌன்சர் பந்து பட்டத்தில் ஷிகர் தவனின் கட்டை விரலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் ஃபீல்டிங் செய்யவில்லை.

மருத்துவமனையில் நடைபெற்ற பரிசோதனையின் முடிவில் தவன் விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே காயம் காரணமாக அவர் 3 வாரங்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில், காயம் காரணமாக உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து ஷிகர் தவன் செவ்வாய்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து ரிஷப் பண்ட் அல்லது ஷ்ரேயாஸ் ஐயர் மாற்று வீரராக இடம்பெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொகுதிப் பங்கீடு: திமுக - மனிதநேய மக்கள் கட்சி பேச்சுவார்த்தை தொடக்கம்

தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு

நேபாளம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலி

நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழா கொடியேற்றம்

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

SCROLL FOR NEXT