செய்திகள்

அதிக வருவாய் ஈட்டும் வீரர்கள்: ஃபோர்ப்ஸ் பட்டியலில் ஒரே இந்திய வீரர் கோலி

DIN


உலகில் அதிக வருவாய் ஈட்டும் விளையாட்டு வீரர்கள் தொடர்பாக ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள பட்டியலில் ஒரே இந்தியராக கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி இடம்பிடித்துள்ளார். 
அவரது ஆண்டு வருவாய் ரூ.173 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. விளம்பரங்கள் உள்ளிட்ட வகைகளில் சுமார் ரூ.145 கோடியும், இந்திய அணியில் ஊதியமாக பெற்றது, போட்டிகளில் வென்றது போன்ற வகையில் ரூ.27 கோடியும் அவர் ஈட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
ஃபோர்ப்ஸின் அந்தப் பட்டியலில் கோலி 17 இடங்கள் இறங்கி, தற்போது 100-ஆவது இடத்தில் உள்ளார். விளம்பரங்கள் உள்ளிட்டவற்றின் மூலம் அவர் ஈட்டும் வருவாய் சுமார் ரூ.6 கோடி அதிகரித்துள்ள போதும், அவர் 83-ஆவது இடத்திலிருந்து, 100-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். 
உலகின் அதிக வருவாய் ஈட்டும் விளையாட்டு வீரராக ஆர்ஜெண்டீனா கால்பந்து வீரர் லயோனல் மெஸ்ஸி முதலிடத்தில் இருக்கிறார். அவரது ஆண்டு வருவாய் சுமார் ரூ.880 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது.  அவருக்கு அடுத்தபடியாக போர்ச்சுக்கீசிய கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ரூ.755 கோடியுடன் 2-ஆவது இடத்தில் உள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை - நாகா்கோவில், கொச்சுவேலி வாராந்திர ரயில்கள் நீட்டிப்பு

உடல் பருமன் சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: அமைச்சரிடம் தந்தை புகாா்

தமிழகத்தில் 1,000 இடங்களில் நீா்ச்சத்து குறைபாட்டை போக்கும் மையங்கள்

பிஎஸ்என்எல்-க்கு 5 ஜி சேவையை வழங்க வேண்டும்: ஓய்வூதியா் மாவட்ட மாநாட்டில் வலியுறுத்தல்

1,282 பட்டதாரி ஆசிரியா்களுக்கு ஊதியம் வழங்க கொடுப்பாணை

SCROLL FOR NEXT