செய்திகள்

தகுதி வாய்ந்த வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்க அனுமதி: இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு அரசு உத்தரவாதம்

DIN


இந்தியாவில் நடைபெறும் சர்வதேச போட்டிகளில் தகுதி வாய்ந்த வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்க அனுமதி தரப்படும் என ஐஓஏவுக்கு மத்திய அரசு செவ்வாய்க்கிழமை எழுத்துப்பூர்வமான உத்தரவாதம் அளித்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற புல்வாமா தாக்குதலை அடுத்து, புது தில்லியில் நடைபெற்ற உலக துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்க பாகிஸ்தான் வீரர்களுக்கு மத்திய அரசு அனுமதி தரவில்லை.  மேலும் கடந்த ஆண்டு உலக குத்துச்சண்டை போட்டியில் கொúஸாவோ வீராங்கனை டோன்ஜெடாவை பங்கேற்க அனுமதி தரவில்லை. 
இது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் இந்தியாவில் சர்வதேச போட்டிகளை நடத்துவது தொடர்பான பேச்சுவார்த்தைக்கு தடை விதித்து சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனம் அறிவிப்பு வெளியிட்டது. மேலும் இதர சர்வதேச சம்மேளனங்களும் எந்த தொடர்பும் கொள்ளக்கூடாது என அறிவுறுத்தப்பட்டது.
மத்திய அரசு எழுத்துப்பூர்வமான உத்தரவாதம் தராவிட்டால், வருங்காலத்தில் ஒலிம்பிக் தொடர்புடைய போட்டிகள் இந்தியாவில் நடத்த முடியாது என எச்சரித்தது.
இந்நிலையில் இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் நரீந்தர் பத்ராவுக்கு, மத்திய விளையாட்டுத் துறை செயலாளர் ராதே ஷியாம் ஜுலானியா எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது:
எந்த தேசிய ஒலிம்பிக் சம்மேளனத்தைச் சேர்ந்த தகுதி வாய்ந்த அனைத்து வீரர்களையும், போட்டிகளில் பங்கேற்க அனுமதி தரப்படும். ஐஓசி மேற்பார்வையில் இந்தியாவில் நடத்தப்படும் போட்டிகளில், தகுதி வாய்ந்த வீரர்கள், சம்மேளன நிர்வாகிகள் கலந்து கொள்ளலாம். 
விளையாட்டு மேம்பாட்டுக்கு மத்திய அரசு மிகுந்த முக்கியத்துவம் தருகிறது. ஐஓசி மற்றும் ஐஓஏ உதவியுடன், வீரர்களின் திறமைகளை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ஜுலானியா.
இதற்கு இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பத்ரா வரவேற்பு தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆஸ்திரேலியா: காவல் துறை சுட்டதில் 16 வயது சிறுவன் உயிரிழப்பு

தரமில்லாத சாலையை பெயா்த்தெடுத்த ஊராட்சி மன்ற உறுப்பினா் கைது

நிரவி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்த வலியுறுத்தல்

பரிசோதனைக்கு மாதிரி தர மறுப்பு: பஜ்ரங் புனியாவுக்கு இடைக்காலத் தடை

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ‘ப்ளூ காா்னா்’ நோட்டீஸ்

SCROLL FOR NEXT