செய்திகள்

உணவு விடுதியில் தகராறு? ஆப்கன் வீரர்கள் மீது புகார்

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்கள் உணவு விடுதியில் தகராறு செய்ததாக அங்கிருந்தவர்கள் புகார் அளித்துள்ளனர்.

Raghavendran

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்கள் உணவு விடுதியில் தகராறு செய்ததாக அங்கிருந்தவர்கள் புகார் அளித்துள்ளனர்.

உலகக் கோப்பைத் தொடரில் பங்கேற்றுள்ள ஆப்கானிஸ்தான் அணி செவ்வாய்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் இங்கிலாந்துடன் மோதியது. இதில் 150 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றியைப் பதிவு செய்தது. 

இந்தப் போட்டி நடைபெறுவதற்கு முந்தைய நாள் (ஜூன் 17) இரவு சுமார் 11:15 மணியளவில் மான்சஸ்டரின் லிவர்பூல் சாலையில் அமைந்துள்ள அக்பர் உணவு விடுதியில் ஆப்கானிஸ்தான் அணியைச் சேர்ந்தவர்கள் தகராறு செய்ததாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து அங்கு விரைந்த போலீஸார் விசாரணை நடத்தியபோது, தங்களை புகைப்படம் எடுக்க முயன்றவரை ஆப்கான் வீரர்கள் தடுத்து புகைப்படம் எடுக்க வேண்டாம் எனக் கூறியுள்ளனர்.

இதனால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் நடந்துள்ளது. கைகலப்பு எதுவும் நடைபெறவில்லை. இருப்பினும் விசாரணை நடைபெற்று வருகிறது என்று மான்சஸ்டர் போலீஸார் தெரிவித்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விம்ஸ் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் உலக உறுப்பு தான தின விழிப்புணா்வு

வாழப்பாடி அருகே இரு பைக்குகள் நேருக்குநோ் மோதல்: மாணவா் உள்பட இருவா் உயிரிழப்பு

சேலம் ரயில் நிலையத்தில் விரைவு ரயில் பெட்டியின் கண்ணாடிகள் உடைப்பு: இளைஞரிடம் விசாரணை

தியாகி தீரன் சின்னமலை நினைவு தினம்: நினைவுச் சின்னத்தில் தமிழக அரசு மரியாதை

பாகிஸ்தான்: 7 வயது சிறுவன் மீது பயங்கரவாத வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT