செய்திகள்

இந்தியா விரைகிறார் சௌரவ் கங்குலி? தாயார் மருத்துவமனையில் அனுமதி

முன்னாள் கிரிக்கெட் கேப்டன் சௌரவ் கங்குலியின் தாயார் நெஞ்சு வலி காரணமாக புதன்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Raghavendran

முன்னாள் கிரிக்கெட் கேப்டன் சௌரவ் கங்குலியின் தாயார் நிருபா கங்குலி நெஞ்சு வலி காரணமாக புதன்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தற்போது நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரில் வர்ணனையாளராக செயல்பட்டு வரும் கங்குலி, தனது தாயார் உடல்நிலை குறித்த செய்தியைப் பகிர்ந்துகொண்டார்.

அப்போது கூறுகையில், எனது தாயாருக்கு உடல்நிலை சரியில்லை. நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றார்.

இதையடுத்து இந்தியா திரும்பவுள்ள கங்குலி, செவ்வாய்கிழமை நடைபெறும் இந்தியா, மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான ஆட்டத்துக்கு முன் மீண்டும் இங்கிலாந்து செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை!

டிரம்ப் இல்லத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை

இன்று வெற்றி யாருக்கு? தினப்பலன்கள்!

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

திமுகவின் தொகுதிப் பங்கீட்டுக் கணக்கு!

SCROLL FOR NEXT