செய்திகள்

புவனேஸ்வர் குமார் வலைப்பயிற்சி செய்யும் விடியோ வெளியிட்ட பிசிசிஐ

இளம் வேகப்பந்துவீச்சாளர் நவ்தீப் சைனி, வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக இங்கிலாந்து சென்றார்.

Raghavendran

பாகிஸ்தானுக்கு எதிரான உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் புவனேஸ்வர் குமாருக்கு காலின் தொடைப் பகுதியில் தசைப் பிடிப்பு ஏற்பட்டது. இதனால் 3 போட்டிகள் வரை அவர் பங்கேற்க வாய்ப்பில்லை என்று கேப்டன் விராட் கோலி தெரிவித்திருந்தார்.

மேலும், படிகளில் ஏறும் போது புவனேஸ்வர் குமார் அசௌகரியமாக உணர்ந்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும் அடுத்த ஒரு வாரத்தில் முழு உடல்தகுதியை அடைவார் என்று இந்திய அணி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

 இதனிடையே ரஞ்சி மற்றும் ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் இளம் வேகப்பந்துவீச்சாளர் நவ்தீப் சைனி, வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக இங்கிலாந்து சென்றார்.

இந்நிலையில், உள்கட்டமைப்பு வலைப்பயிற்சித் தளத்தில் புவனேஸ்வர் குமார் பந்துவீச்சு பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் விடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. மேற்கிந்திய தீவுகளுடனான போட்டியில் அவர் பங்கேற்கவில்லை என்றாலும், புவனேஸ்வரின் உடல்தகுதியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் இந்திய கிரிக்கெட் அணிக்கு மட்டுமல்லாமல் ரசிகர்களுக்கும் சற்று ஆறுதலை அளித்துள்ளது.

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் பும்ரா, புவனேஸ்வர் மற்றும் ஷமி ஆகிய 3 வேகப்பந்துவீச்சாளர்கள் மட்டுமே இருப்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கவிதை எழுதவா... பார்வதி நாயர்!

சூர்ய நிலவு... ரகுல் ப்ரீத் சிங்!

ஐசிசி டி20 தரவரிசையில் முதலிடம் பிடித்த தமிழன்..! 20 போட்டிகளில் சாதித்த வருண் சக்கரவர்த்தி!

அசிஸ்டென்ட் மெடிக்கல் ஆபீஸர் பணி: விண்ணப்பிக்க நாளை கடைசி

ஜாய் கிரிஸில்டாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் வழக்கு!

SCROLL FOR NEXT