செய்திகள்

மைதானத்தில் அத்துமீறி நுழைந்து தோனியைத் துரத்திய ரசிகர்! (விடியோ)

தோனி வேகமாக ஓடத் தொடங்கினார். அந்த ரசிகரும் தோனியைத் துரத்தியபடி ஓடினார். பிறகு...

எழில்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.  கேப்டன் கோலியின் 116, குல்தீப் யாதவ் 3 விக்கெட் போன்றவை அணியின் வெற்றிக்கு வித்திட்டன. முதலில் ஆடிய இந்தியா 250 ரன்களை எடுத்தது. பின்னர் ஆடிய ஆஸி. 242 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் இன்னிங்ஸில் ஃபீல்டிங் செய்ய இந்திய வீரர்கள் மைதானத்துக்குள் வந்துகொண்டிருந்தபோது ஒரு சம்பவம் நடைபெற்றது. தல என்கிற டிஷர்ட் அணிந்திருந்த ரசிகர் ஒருவர் மைதானத்தினுள் அத்துமீறி நுழைந்து இந்திய வீரர்கள் அருகே சென்றார். மேலும், அவர் தோனி அருகே சென்றபோது உடனே தோனி வேகமாக ஓடத் தொடங்கினார். அந்த ரசிகரும் தோனியைத் துரத்தியபடி ஓடினார். பிறகு, ஸ்டம்புகளுக்கு அருகே சென்று நின்றார் தோனி. ஓடி வந்த வேகத்தில் ரசிகர் தோனியில் காலில் விழுந்து பிறகு அவரை அணைத்துக்கொண்டார். இதையடுத்து, தாமதாக நிலைமையை உணர்ந்த பாதுகாப்பு அதிகாரிகள், பிறகு அந்த நபரை அழைத்துச்சென்றார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திண்டுக்கல் மாவட்டத்தில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை: கொடைக்கானலில் உணவக உரிமையாளா் கைது

குடியரசு துணைத் தலைவா் தோ்தல்: பிஆா்எஸ் ஆதரவு யாருக்கு?

60,000 ரிசா்வ் வீரா்களுக்கு இஸ்ரேல் அழைப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் ராஜீவ் காந்தி பிறந்த நாள்

வழிகாட்டுதல் அறிக்கை

SCROLL FOR NEXT