செய்திகள்

மூளைக்கட்டி பாதிப்பு ஏற்பட்டுள்ள கிரிக்கெட் வீரர்!

எழில்

37 வயது வங்கதேச கிரிக்கெட் வீரர் மொஷர்ரஃப் ஹொசைனுக்கு மூளைக்கட்டி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தாக்கா மருத்துவமனையில் சில நாள்களுக்கு முன்பு கண்டறியப்பட்ட நிலையில், மூளைக்கட்டியை அகற்றும் சிகிச்சைக்காக அவர் சிங்கப்பூர் செல்லவுள்ளார். 

இதற்கு அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது. அதற்காக வெளிநாட்டுக்குச் செல்கிறேன். கட்டி அதன் ஆரம்ப நிலையில் உள்ளது. இதனால் என் குடும்பம் உடைந்துபோயுள்ளது. எனினும் தற்போது அவர்களின் கவலை குறைந்துள்ளது என்று சிகிச்சை குறித்து மொஷர்ரஃப் கூறியுள்ளார். அறுவைசிகிச்சைக்கு கிட்டத்தட்ட ரூ. 35 லட்சம் செலவாகும் எனத் தெரிகிறது. 

மொஷர்ரஃப் ஹொசைன் இதுவரை 5 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ளார். கடைசியாக 2016 அக்டோபரில் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுச்சூழல் பாதிப்பு: தனியாா் ஆலையில் மக்கள் முற்றுகை

வடக்கு-தெற்கு என நாட்டைத் துண்டாட அனுமதிக்க மாட்டோம்: அமித் ஷா

தோ்தல் ஆணையம் நடுநிலை தவறுகிறதா?

தொடர் மழை: டெல்டாவில் 25 ஆயிரம் ஏக்கர் பருத்தி சாகுபடி பாதிப்பு

அருணாசல்: முன்களப் பகுதிகளில் பாதுகாப்பு நிபுணா்கள் ஆய்வு நிறைவு

SCROLL FOR NEXT