செய்திகள்

சையத் முஷ்டாக் அலி கோப்பை: இறுதிச்சுற்றில் மோதும் கர்நாடகா - மஹாராஷ்டிரா அணிகள்!

சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியில் இது கர்நாடக அணியின் தொடர்ச்சியான 13-வது வெற்றியாகும்...

எழில்

சூப்பர் லீக் சுற்றில் முதலிடம் பிடித்த கர்நாடகா மற்றும் மஹாராஷ்டிரா ஆகிய இரு அணிகளும் சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 போட்டியின் இறுதிச்சுற்றில் போட்டியிடவுள்ளன.

இன்று நடைபெற்ற சூப்பர் லீக் சுற்று ஆட்டங்களில் மும்பை, மஹாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய அணிகள் வெற்றி பெற்றன. 

கர்நாடகா - விதர்பா அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் முதலில் விளையாடிய விதர்பா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் எடுத்தது. வான்கடே 41 பந்துகளில் 56 ரன்கள் எடுத்தார். பிறகு விளையாடிய கர்நாடக அணி 19.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கேப்டன் மனீஷ் பாண்டே 49 ரன்கள் எடுத்துக் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 

சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியில் இது கர்நாடக அணியின் தொடர்ச்சியான 13-வது வெற்றியாகும். இந்தப் போட்டியின் வரலாற்றில் வேறு எந்த அணியும் இந்த எண்ணிக்கையிலான வெற்றிகளைப் பெறவில்லை. இதற்கு முன்பு பெங்கால் தொடர்ச்சியாக 12 வெற்றிகள் பெற்றதே சாதனையாக இருந்தது. 

இந்த வெற்றியின் மூலம் நான்கு ஆட்டங்களில் விளையாடி நான்கிலும் வெற்றி பெற்ற கர்நாடக அணி 16 புள்ளிகளுடன் குரூப் பி பிரிவில் முதலிடம் பெற்றது. 12 புள்ளிகள் பெற்று 2-ம் இடம் பிடித்ததால் மும்பை அணியால் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற முடியாமல் போனது. 

மஹாராஷ்டிரா - ரயில்வே இடையிலான ஆட்டத்தில் மஹாராஷ்டிரா அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. முதலில் விளையாடிய மஹாராஷ்டிரா அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் குவித்தது. விக்கெட் கீப்பர் நிகில் நாயக் 58 பந்துகளில் 8 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 95 ரன்கள் எடுத்துக் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஷயிக் 59 ரன்கள் எடுத்தார். இதன்பிறகு விளையாடிய ரயில்வே அணி, 20 ஓவர்களில் 156 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. சமத் ஃபல்லா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் நான்கு ஆட்டங்களில் விளையாடி நான்கிலும் வெற்றி பெற்ற மஹாராஷ்டிரா அணி இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றது.

வியாழன் அன்று இந்தூரில் நடைபெறவுள்ள சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியின் இறுதிச்சுற்றில் கர்நாடகா - மஹாராஷ்டிரா அணிகள் மோதவுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.590 கோடி முறைகேடு: ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கியின் பங்குகள் 20% சரிவு!

வெளியானது இறுதி வாக்காளர் பட்டியல் | செய்திகள்: சில வரிகளில் | 23.02.26

இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா? மீண்டும் விண்ணப்பிக்கலாம்!

ஹெட்மேயர், ரோவ்மன் பௌவல் அதிரடி: ஜிம்பாப்வேவுக்கு 255 ரன்கள் இலக்கு!

நாளை நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலா

SCROLL FOR NEXT