செய்திகள்

உலகக் கோப்பையை இந்திய அணி நிச்சயம் வெல்லும்: முகமது அசாருதீன் நம்பிக்கை

உலகக் கோப்பையை இந்திய அணி நிச்சயம் வெல்லும் என்று முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் உறுதிபட நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

Raghavendran

உலகக் கோப்பையை இந்திய அணி நிச்சயம் வெல்லும் என்று முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் உறுதிபட நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:

பல அணிகளை எதிர்கொள்ளும் அளவு மிகச்சிறந்த பந்துவீச்சு இந்திய அணியில் உள்ளது. சிறந்த பந்துவீச்சாளர்கள், சிறந்த அணி உள்ளதால் உலகக் கோப்பையை வெல்ல சிறந்த வாய்ப்பும் உள்ளது. எனவே இந்திய அணி நிச்சயம் வெல்லும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

பந்துவீச்சுக்கு சாதகமான களங்களில் பேட்ஸ்மேன்கள் திணறுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை. அதுவே எதிர் அணியை வீழ்த்தும் அளவு பந்துவீச்சு இருந்தால் அதுவே சிறந்த பந்துவீச்சாளர்களின் திறமையாகும். இந்திய அணியில் அதுபோன்ற சிறந்த பந்துவீச்சாளர்கள் உள்ளனர்.

கிரிக்கெட்டில் எது வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். அந்தந்த நேரங்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் அணியால் மட்டுமே வெல்ல முடியும். சில எதிர்பாரா வெற்றிகளும் இருக்கும். ஆனால், இது எதுவுமே இந்தியாவிடம் நடக்காது. ஏனென்றால் நாம் தான் முதன்மையான (நம்பர் 1) அணி என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாரதத்தின் அதிருஷ்டம் பூபேன் ஹசாரிகா: பிரதமா் நரேந்திர மோடி

ஹிமாசல்: பசுவின் வயிற்றில் இருந்து 28 கிலோ பிளாஸ்டிக், 41 ஆணிகள் அகற்றம்

டி20 தொடரை வென்றது இலங்கை!

அமெரிக்க வரியால் 2-ஆம் காலாண்டில் தாக்கம்: சிஇஏ நாகேஸ்வரன்

வாக்குத் திருடா்களை பாதுகாக்கிறது தோ்தல் ஆணையம்: காா்கே குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT