செய்திகள்

1975 உலகக் கோப்பை:ஆஸ்திரேலியா-மே.இ.தீவுகள் இறுதி ஆட்டம்

DIN

முதல் உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் ஆஸி. -மே.இ.தீவுகள் மோதின. கிளைவ் லாயின் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார். அப்போது மே.இ.தீவுகள் 291-8 ரன்களை குவித்தது. பின்னர் ஆடிய ஆஸி. அணியும் பதிலுக்கு சிறப்பாக ஆடி வந்த நிலையில், 162-3 என வலுவான நிலையில் இயான் சேப்பல்-டக் வால்டர்ஸ் ஆடி வந்தனர். அப்போது விவ் ரிச்சர்ஸ்ட் பந்துவீச வந்தார். அவரது பந்தை அடித்த இயான் சேப்பல் முதலில் 1 ரன்னை எடுத்தார். பந்தை தடுக்க ரிச்சர்ட்ஸ் திணறுவதை கண்ட சேப்பல் மீண்டும் ஓட முயல்கையில், விவ் ரிச்சர்ட்ஸ் பந்தை சேகரித்து லாயிட்வசம் வீசினார். சேப்பலை ரன் அவுட் செய்தார் லாயிட். இதனால் ஆஸி பேட்டிங் சரிந்தது. தாம்சனும் ரன் அவுட் செய்யப்பட்டதால், மே.இ.தீவுகள் கோப்பை வென்றது.

மிகவும் பழைமையான மைதானமான லார்ட்ஸ் 1814-இல் கட்டப்பட்டது. உலகின் அனைவரையும் கவர்ந்த கிரிக்கெட் மைதானங்களில் ஒன்றான லார்ட்ஸ், கிரிக்கெட்டின் மெக்கா எனப்படுகிறது. கடந்த 1884 முதல் இங்கு பல்வேறு ஆட்டங்கள் நடந்து வருகின்றன. 
ஏற்கெனவே ஒரு முறை இறுதி ஆட்டம் நடைபெற்ற நிலையில், 2019 உலகக் கோப்பை இறுதி ஆட்டம் உள்பட 5 ஆட்டங்கள் இங்கு நடக்கின்றன.

ஆட்டங்கள்
ஜூன் 23-பாகிஸ்தான்-தென்னாப்பிரிக்கா ஜூன் 25-இங்கிலாந்து-ஆஸ்திரேலியா ஜூன் 29-நியூஸிலாந்து-ஆஸ்திரேலியா ஜூலை 5-பாகிஸ்தான்-வங்கதேசம் ஜூலை 14-இறுதி ஆட்டம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ. 35 கோடி பறிமுதல்: ஜார்கண்ட் அமைச்சரின் செயலர், பணியாளர் கைது

தேர்தல் பணியிலிருந்த அதிகாரி மாரடைப்பால் மரணம்!

மது போதையில் அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! பேருந்தை நிறுத்திய பயணிகள்!

சவுக்கு சங்கர் மீது சேலத்திலும் வழக்குகள் பதிவு!

ஜனநாயகம், அரசியலமைப்பைப் பாதுகாக்க வாக்களிப்போம்: ராகுல், பிரியங்கா

SCROLL FOR NEXT