செய்திகள்

பும்ரா சிறந்த பந்துவீச்சாளர்: பிரெட் லீ புகழாரம்

DIN

இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா, சிறந்த பந்துவீச்சாளர் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ புகழாரம் சூட்டியுள்ளார்.
உலகக் கோப்பையில் பங்கேற்கும் அணிகளில் சிறந்த 3 வேகப்பந்து வீச்சாளர்கள் என 3 பேரின் பெயர்களை அறிவித்தார் பிரெட் லீ.
அவர்களில் பும்ராவின் பெயரும் இடம்பெற்றுள்ளது.
பிரெட் லீ கூறுகையில், "பும்ரா மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சாளர் ஆவார். 49 ஒரு நாள் ஆட்டங்களில், 85 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இது மிகப் பெரிய சாதனை. பந்துவீச்சில் யார்க்கரையும் துல்லியமாக அவர் வீசுகிறார். ஆஸ்திரேலிய அணியைப் பொறுத்தவரை மிச்செல் ஸ்டார்க், பட் கம்மின்ஸ் ஆகிய வீரர்கள் மிகச் சிறப்பாக பந்துவீசி வருகின்றனர்' என்றார்.
பிரெட் லீ வேகப்பந்து வீச்சுக்கு புகழ்பெற்றவர் ஆவார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

9-ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

ஐஏஎஸ் தோ்வில் வென்றவருக்கு என்.ஐ. உயா்கல்வி மையம் சாா்பில் பாராட்டு

சூரியன்விளை பத்ரகாளி கோயிலில் நட்சத்திர மகா யாகம்

சட்ட தன்னாா்வல தொண்டா் பணிக்கு மே 20-க்குள் விண்ணப்பிக்கலாம்

தோவாளை - தாழக்குடி இடையே சாலைப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT