செய்திகள்

சேவாக் பாணியில் தொடக்கம்; தோனி பாணியில் முடிவு: வங்கதேசத்துக்கு 149 ரன்கள் இலக்கு!

DIN


வங்கதேசத்துடனான முதல் டி20 ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியா, வங்கதேசம் அணிகளுக்கிடையிலான முதல் டி20 ஆட்டம் தில்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. 

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் களமிறங்கினர். முதல் ஓவரிலேயே இரண்டு பவுண்டரிகள் அடித்து ரோஹித் அசத்தினார். ஆனால், அதே ஓவரின் கடைசி பந்தில் அவர் 9 ரன்களுக்கு எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமும் இழந்தார்.

ஆடுகளம் மந்தமாக இருந்த காரணத்தினால் தவான் மற்றும் ராகுல் நிதான ஆட்டத்தை கையாண்டனர். இருந்தபோதிலும், ராகுல் 15 ரன்களுக்கு அமினுல் இஸ்லாம் சுழலில் ஆட்டமிழந்தார். இந்த நிதான ஆட்ட யுத்தியை மாற்றி வங்கதேசக்கு நெருக்கடி தரும் வகையில் ஷ்ரேயாஸ் ஐயர் வந்த வேகத்தில் சிக்ஸர்கள் அடித்து மிரட்டத் தொடங்கினார்.

ஆனால், இந்த அதிரடியும் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கவில்லை. 2 சிக்ஸர்கள், 1 பவுண்டரி அடித்த ஷ்ரேயாஸ் 13 ரன்களில் 22 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதையடுத்து, தவானுடன் பந்த் இணைந்தார். தொடக்கம் முதல் நிதானம் காட்டி வந்த தவான், சற்று அதிரடிக்கு மாற முயன்றார். ஆனால், இந்தச் சூழலில் ரிஷப் பந்தின் மோசமான அழைப்பால் அவர் 41 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அறிமுக நாயகனாக களமிறங்கிய ஷிவம் டூபேவும் வெறும் 1 ரன்னுக்கு சொதப்பினார்.

இதையடுத்து, ரிஷப் பந்த்  தனது வழக்கமான பாணியைவிட்டு ஆடுகளத்துக்கு ஏற்ப ஆட்டத்தை மாற்றிக்கொண்டு ரன் குவித்தார். இதனால், பினிஷிங்கில் அசத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவரும் 27 ரன்கள் எடுத்த நிலையில், 19-வது ஓவரில் ஆட்டமிழந்தார்.

இதன்பிறகு, க்ருணால் பாண்டியா மற்றும் வாஷிங்டன் சுந்தர் கடைசி கட்டத்தில் அதிரடி காட்டி இந்திய அணியை 140 ரன்களைக் கடக்கச் செய்தனர். 19-வது ஓவரில் பாண்டியா 1 பவுண்டரியும், சுந்தர் 1 சிக்ஸரும் அடித்தனர். கடைசி ஓவரில் இருவரும் தலா 1 சிக்ஸர் அடித்து ஆட்டத்தை நிறைவு செய்தனர். இதன்மூலம், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்கள் எடுத்துள்ளது.

ஆடுகளத்தை நன்கு பயன்படுத்திய வங்கதேச பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசினர். அந்த அணி சார்பில், அமினுல் இஸ்லாம் மற்றும் ஷபிபுல் இஸ்லாம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், ஆபிப் ஹோசைன் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இந்திய அணியின் இன்னிங்ஸை சேவாக் பாணியில் பவுண்டரியுடன் தொடங்கினார் ரோஹித் சர்மா. இதேபோல் க்ருணால் பாண்டியா இந்திய அணியின் இன்னிங்ஸை தோனி பாணியில் சிக்ஸருடன் நிறைவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

SCROLL FOR NEXT