செய்திகள்

ஆர்சிபி அணி வெற்றி பெற நாங்களும் நன்கு விளையாட வேண்டும்: வெளிநாட்டு வீரர் ஒப்புதல்

எழில்

ஐந்து முறை பிளே ஆஃப்புக்குத் தகுதி பெற்றும் மூன்று முறை இறுதிச்சுற்றில் விளையாடியும் பிரபல வீரர்களைக் கொண்டிருந்தும் பெங்களூர் அணியால் ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை இதுவரை வெல்லமுடியவில்லை. கடந்த வருடம் 6-ம் இடம், 2017-லிலும் இந்த வருடமும் கடைசி இடம் எனக் கடந்த மூன்று வருடங்களாக மிக மோசமாகவே விளையாடி வருகிறது. இதையடுத்து, அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன், பந்துவீச்சுப் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா ஆகியோர் நீக்கப்பட்டார்கள். அதற்குப் பதிலாக தலைமைப் பயிற்சியாளராக சைமன் கடிச்சும் அணி இயக்குநராக மைக் ஹெஸ்ஸனும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். 

ஐபிஎல் 2020 சீசனை முன்னிட்டு வீரா்கள் பரிமாற்றம் சமீபத்தில் முடிவடைந்தது. ஐபிஎல் அணி நிா்வாகங்கள் தங்களுக்கு தேவையான வீரா்களைப் பரிமாறிக் கொண்டன. மேலும் அணியிலிருந்து விடுவிக்க வேண்டிய வீரர்களின் பட்டியலையும் அணிகள் வெளியிட்டுள்ளன. ஆர்சிபி அணியில் டி வில்லியர்ஸ், மொயீன் அலி என இரு வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே தற்போது உள்ளார்கள். 

இதையடுத்து மொயீன் அலி கூறியதாவது:

ஐபிஎல் போட்டியில் நல்ல ஆரம்பம் கிடைக்கவேண்டும். நாங்கள் எப்போதும் நிதானமாகவே வெற்றி பெற ஆரம்பிக்கிறோம். பெங்களூரில் விளையாடும்போது துணிச்சலுடன் விளையாடவேண்டும். அது நல்ல ஆடுகளம். பவுண்டரிகளின் எல்லைக்கோடு சிறிய அளவில் இருக்கும். 

எப்போதும் ஐபிஎல் ஆட்டங்களின் வெற்றிகளுக்காக விராட் கோலி, டி வில்லியர்ஸையே நம்பியிருக்கக் கூடாது. நானும் இதர வீரர்களும் பொறுப்பை ஏற்றுக்கொண்டு நன்கு விளையாடவேண்டும் என்று கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மொரீஷியஸில் இளையராஜா: வைரல் புகைப்படம்!

உருவகேலி செய்யாதீர்கள்: 2 ஆண்டுகளாக நோயுடன் போராடும் மலையாள நடிகை!

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

SCROLL FOR NEXT