செய்திகள்

கொல்கத்தா பகலிரவு டெஸ்ட்: முதல் மூன்று நாள்களுக்கு ஈடன் கார்டன்ஸ் ‘ஹவுஸ்ஃபுல்’!

முதல் மூன்று நாள்களுக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்பனையாகியுள்ளன. ஆன்லைன் வழியாக... 

எழில்

பிசிசிஐ தலைவா் சௌரவ் கங்குலியின் தீவிர முயற்சியால் முதல்முறையாக வங்கதேசத்துக்கு எதிராக கொல்கத்தாவில் நடைபெறவுள்ள பகலிரவு டெஸ்ட் ஆட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணி பங்கேற்கிறது. நவம்பா் 22-ம் தேதி கொல்கத்தா ஈடன் காா்டன்ஸ் மைதானத்தில் நடைபெறவிருந்த வங்கதேச அணியுடனான இரண்டாவது டெஸ்ட் ஆட்டம் பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ளது. இதன்மூலம் இந்திய கிரிக்கெட் அணி முதல்முறையாகப் பகலிரவு டெஸ்ட் ஆட்டத்தில் பங்கேற்கிறது. கொல்கத்தா பகலிரவு டெஸ்டில் எஸ்.ஜி. இளஞ்சிவப்பு பந்து பயன்படுத்தப்படுகிறது. மதியம் 1 மணிக்கு ஆட்டம் ஆரம்பமாகி, இரவு 8 மணிக்கு நிறைவுபெறும். 

இந்த டெஸ்ட் குறித்து கங்குலி கூறியதாவது: முதல் மூன்று நாள்களுக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்பனையாகியுள்ளன. ஆன்லைன் வழியாக அனைத்து டிக்கெட்டுகளும் வாங்கப்பட்டுள்ளன. விராட் கோலி மகத்தான கிரிக்கெட் வீரர். ரசிகர்களால் நிறைந்த மைதானத்தில்தான் அவர் விளையாடவேண்டும். பேட்டிங் செய்ய அவர் களமிறங்கும்போது மைதானம் முழுக்க ரசிகர்கள் இருந்தால் அவருக்கு உற்சாகமாக இருக்கும். இந்தியாவின் சிறந்த கிரிக்கெட் வீரர்கள் காலி மைதானங்களில் விளையாடக்கூடாது. கொல்கத்தாவில் முதல் மூன்று நாள்களுக்கு முழு கூட்டமும் இருக்கும் என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியாவுக்கு எதிரான சக்திகளுடன் ராகுலுக்கு தொடா்பு! பாஜக தலைவா் நிதின் நபின் குற்றச்சாட்டு!

லீமா ரோஸுக்கு அதிமுக மாநில மகளிா் அணி இணைச் செயலா் பதவி!

கன்னட நடிகா் ராஜ்குமாா் கடத்தல் வழக்கு: வீரப்பன் கூட்டாளிகள் விடுதலைக்கு எதிரான மனு தள்ளுபடி!

தில்லிக்கு ‘இந்திரபிரஸ்தா’ பெயா் சூட்ட வேண்டும்: பாஜக எம்.பி. கோரிக்கை!

‘நீதித் துறையில் ஊழல்’: என்சிஇஆா்டி பாடப் பிரிவுக்கு தலைமை நீதிபதி கடும் ஆட்சேபம்! தாமாக முன்வந்து விசாரணை!!

SCROLL FOR NEXT