செய்திகள்

டி10 போட்டியில் சதத்தைத் தவறவிட்ட கிறிஸ் லின்: காரணம் என்ன?

எழில்

டி20 போட்டியில் சதமடித்தாலே அது ஒரு பெரிய சாதனைதான். டி10 போட்டியிலும் அது சாத்தியமா?

அதிர்ஷ்டம் இருந்திருந்தால் அதைச் சாத்தியப்படுத்தியிருப்பார் கிறிஸ் லின். 

அபு தாபியில் நேற்று நடைபெற்ற டி10 போட்டியில் கிறிஸ் லின் பங்கேற்ற மராத்தா அராபியன்ஸ் 10 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் குவித்தது. இதன்பிறகு விளையாடிய டீம் அபு தாபி அணி, 3 விக்கெட் இழப்புக்கு 114 ரன்கள் மட்டும் எடுத்து 24 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 

29 வயது லின், 30 பந்துகளில் 7 சிக்ஸர்களும் 9 பவுண்டரிகளுடன் 91 ரன்கள் எடுத்துள்ளார். இதற்கு முன்பு டி10 போட்டியில் அலெக்ஸ் ஹேல்ஸ் எடுத்த 87 ரன்கள் தான் அதிகபட்சமாக இருந்தது. அந்தச் சாதனையை லின் முறியடித்துள்ளார். 

இன்னிங்ஸின் கடைசி 18 பந்துகளில் நான்குப் பந்துகள் மட்டுமே எதிர்கொண்டார் லின். அதனால் தான் அவரால் சதமடிக்க முடியாமல் போனது. கடைசி ஓவரின்போது 87 ரன்களில் இருந்தார். எனினும் அந்த ஓவரின் கடைசிப் பந்தை விளையாட மட்டுமே லின்னுக்கு வாய்ப்பு கிடைத்தது. அதில் அவர் பவுண்டரி அடித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கஞ்சாவுடன் முதல்வரிடம் மனு - பாஜக நிர்வாகியிடம் விசாரணை

மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை!

குட் பேட் அக்லி படப்பிடிப்பு அப்டேட்!

ரூ.4 கோடி பறிமுதல் - சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு

செந்தில் பாலாஜி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்ட அமலாக்கத்துறை

SCROLL FOR NEXT