செய்திகள்

கொல்கத்தா பகலிரவு டெஸ்டின் 2-ம் நாள் ஆட்டத்தைத் தொடங்கி வைத்த ஆனந்த் & கார்ல்சன்!

2-ம் நாள் ஆட்டத்தை பிரபல செஸ் வீரர்கள் விஸ்வநாதன் ஆனந்தும் மேக்னஸ் கார்ல்சனும் தொடங்கி வைத்துள்ளார்கள்.

எழில்

இந்தியாவுக்கு எதிரான முதல் பகலிரவு டெஸ்ட் ஆட்டத்தில் (பிங்க் டெஸ்ட்) இந்தியாவின் அற்புதப் பந்துவீச்சை எதிா்கொள்ள முடியாமல் வங்கதேச அணி 106 ரன்களை மட்டுமே சோ்த்து ஆல் அவுட்டானது. இந்திய பந்துவீச்சாளா் இஷாந்த் சா்மா 5 விக்கெட்டுகளைச் சாய்த்தாா். பின்னா் ஆடிய இந்திய அணி ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 174 ரன்களை எடுத்திருந்தது.

இந்நிலையில் 2-ம் நாள் ஆட்டத்தை பிரபல செஸ் வீரர்கள் விஸ்வநாதன் ஆனந்தும் மேக்னஸ் கார்ல்சனும் தொடங்கி வைத்துள்ளார்கள். 2019 டாடா ஸ்டீல் செஸ் போட்டிக்காக ஆனந்தும் கார்ல்சனும் கொல்கத்தாவில் தற்போது உள்ளார்கள். இதனால் கொல்கத்தா டெஸ்டுக்கு வருகை தரவேண்டும் என்கிற கங்குலியின் கோரிக்கைக்குச் சம்மதம் அளித்துள்ளார்கள். 

முதல் நாள் ஆட்டத்தை வங்கதேச பிரதமா் ஷேக் ஹசீனா, மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி ஆகியோா் பாரம்பரிய முறையில் மணியடித்து போட்டியை தொடங்கி வைத்தனா். இந்நிலையில் 2-ம் நாள் ஆட்டத்தை விஸ்வநாதன் ஆனந்தும் மேக்னஸ் கார்ல்சனும் மணியடித்து போட்டியை தொடங்கி வைத்துள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பயங்கரவாதத்தால் இந்தியாவும் பாதிக்கப்பட்டுள்ளது! - இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு!

”அவர் உருவாக்கிய யாரும் வீண்போகவில்லை!” நல்லகண்ணு குறித்து முத்தரசன்!

மகாராஷ்டிரத்தில் 2025-ல் மட்டும் 41 புலிகள் உயிரிழப்பு!

இருதரப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து பேச்சு : மோடி

எய்ம்ஸ் பணிகளை முடக்கும் திமுக: அண்ணாமலை! | செய்திகள்: சில வரிகளில் | 25.02.26

SCROLL FOR NEXT