செய்திகள்

அதிக முட்டை வாங்கும் வீரர் யார்?: சாதனையைச் சமன் செய்த பாகிஸ்தான் வீரர்!

டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் அதிகமுறை டக் அவுட் ஆன வீரர் என்கிற விநோத சாதனையைச் சமன் செய்துள்ளார் பாகிஸ்தான் வீரர் உமர் அக்மல்.

எழில்

டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் அதிகமுறை டக் அவுட் ஆன வீரர் என்கிற விநோத சாதனையைச் சமன் செய்துள்ளார் பாகிஸ்தான் வீரர் உமர் அக்மல்.

இலங்கைக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் டக் அவுட் ஆன பாகிஸ்தான் வீரர் உமர் அக்மல், நேற்று நடைபெற்ற 2-வது டி20 ஆட்டத்திலும் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இதுவரை 84 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ள உமர் அக்மல், 10 முறை டக் அவுட் ஆகி விநோத சாதனையைச் செய்துள்ளார். இலங்கை வீரர் தில்ஷன், 80 ஆட்டங்களில் 10 தடவை ரன் எடுக்காமல் ஆட்டமிழந்துள்ளார். தற்போது, டி20 ஆட்டத்தில் அதிக தடவை ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்த வீரர் என்கிற தில்ஷனின் இந்த விநோத சாதனையைச் சமன் செய்துள்ளார் உமர் அக்மல். 9 டக்குகளுடன் இங்கிலாந்து வீரர் லூக் ரைட் 3-வது இடத்தில் உள்ளார்.

இன்னொருமுறை டக் அவுட் ஆனால் தில்ஷனின் சாதனையைப் பின்னுக்குத் தள்ளிவிடுவார் உமர் அக்மல். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நியூயார்க் மேயராக முதல் இந்திய வம்சாவளி தேர்வு! யார் இவர்?

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

SCROLL FOR NEXT