செய்திகள்

ஐசிசி டெஸ்ட் தரவரிசை: அஸ்வின், ரஹானே முன்னேற்றம்

இன்று வெளியிடப்பட்டுள்ள ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின், 7-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

எழில்

புணே டெஸ்டில் சிறப்பாக விளையாடிய அஸ்வின், ரஹானே ஆகிய இருவரும் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளார்கள்.

இன்று வெளியிடப்பட்டுள்ள ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின், 7-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். அதேபோல பேட்ஸ்மேன் தரவரிசையில் ரஹானே 9-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். 

இரட்டைச் சதமெடுத்த விராட் கோலி, பேட்ஸ்மேன் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள ஸ்டீவ் ஸ்மித்தை விடவும் ஒரு புள்ளி மட்டுமே பின்தங்கியுள்ளார். 

ஐசிசி தரவரிசை - பேட்ஸ்மேன்

1. ஸ்டீவ் ஸ்மித்
2. விராட் கோலி
3. கேன் வில்லியம்சன்
4. புஜாரா
5. ஹென்றி நிகோல்ஸ்
9. ரஹானே

ஐசிசி தரவரிசை - பந்துவீச்சாளர்கள்

1. பேட் கம்மின்ஸ்
2. ரபடா
3. பும்ரா
4. ஜேசன் ஹோல்டர்
5. ஆண்டர்சன்
7. அஸ்வின்

ஐசிசி தரவரிசை - ஆல்ரவுண்டர்கள்

1. ஜேசன் ஹோல்டர்
2. ஜடேஜா
3. ஷகிப் அல் ஹசன்
4. பென் ஸ்டோக்ஸ்
5. அஸ்வின்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.92 ஆக நிறைவு!

மக்களை ஏமாற்றும் தமிழின துரோகி ஸ்டாலின்: இபிஎஸ்

திமுக கூட்டணியில் பல பிரச்னை: எடப்பாடி பழனிசாமி

கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை?

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்!

SCROLL FOR NEXT