முகப்பு
செய்திகள்

3-ஆவது டெஸ்ட்: சிக்ஸருடன் சதம் விளாசிய ரோஹித் ஷர்மா

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரர் ரோஹித் ஷர்மா சதம் விளாசினார்.

Updated On : 19 அக்டோபர், 2019 at 1:54 PM
பகிர்:
Updated On : 31 ஜனவரி, 2024 at 3:56 PM

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரர் ரோஹித் ஷர்மா சதம் விளாசினார்.

இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் ஆட்டம் ராஞ்சியில் சனிக்கிழமை தொடங்கி நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. மயங்க் அகர்வால் 10, புஜாரா 0 மற்றும் விராட் கோலி 12 ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

Advertisement

இந்நிலையில், துணைக் கேப்டன் அஜிங்க்ய ரஹானேவுடன் ஜோடி சேர்ந்த ரோஹித் ஷர்மா அதிரடியாக ஆடி சதம் விளாசினார். இது நடப்பு தொடரில் 3-ஆவது மற்றும் சர்வதேச டெஸ்டில் 6-ஆவது சதமாகும்.

முன்னாள் அதிரடி வீரர் சேவாக் போன்று சிக்ஸருடன் சதம் விளாசிய ரோஹித்துக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. அஜிங்க்ய ரஹானேவும் அரைசதம் கடந்து விளையாடி வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.