செய்திகள்

விராட் கோலியை 24-ஆம் தேதி சந்திக்கிறேன்: சௌரவ் கங்குலி

DIN


விராட் கோலியை 24-ஆம் தேதி சந்திக்கவுள்ளதாகவும், வங்கதேசத்துடனான தொடரில் பங்கேற்பது குறித்து அவரே முடிவு செய்வார் என்றும் பிசிசிஐ தலைவராகத் தேர்வாகவுள்ள சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவுடனான டெஸ்ட் தொடருக்குப் பிறகு, இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. இந்த தொடரில் இருந்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வளிக்கப்படும் என்று தகவல்கள் வெளியானது. 

இந்நிலையில், பிசிசிஐ தலைவராகத் தேர்வாகவுள்ள சௌரவ் கங்குலி மேற்கு வங்க கிரிக்கெட் சங்க தலைமையகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

"அக்டோபர் 24-ஆம் தேதி விராட் கோலியைச் சந்திக்கவுள்ளேன். பிசிசிஐ தலைவர் கேப்டனிடம் பேசுவதுபோல் அவரிடம் பேசவுள்ளேன். அவர்தான் கேப்டன். அதனால் தொடரில் பங்கேற்பதா ஓய்வெடுப்பதா என்பது குறித்து அவர்தான் முடிவு செய்ய வேண்டும். ரோஹித்தை எண்ணி மிக்க மகிழ்ச்சியடைகிறேன். அவர் சிறந்த பேட்ஸ்மேன் என்பதை நான் சொல்ல வேண்டிய தேவையில்லை. அவரால் என்ன செய்ய முடியும் என்பது குறித்து நாம் அனைவருக்கும் தெரியும்.

உமேஷ் யாதவ் மிகவும் புத்திசாலித்தனமாக பந்துவீசியுள்ளார். இந்திய ஆடுகளங்களில் பந்துகள் அதிகளவில் எழும்பாது என்பதால் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் நீளத்தை நன்றாகவே மாற்றியுள்ளார்" என்றார்.

இந்திய அணி கடைசியாக விளையாடிய 56 சர்வதேச ஆட்டங்களில் 48 சர்வதேச ஆட்டங்களில் விராட் கோலி விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

தில்லியில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்ததாக துணை நிலை ஆளுநா் மீது ஆம் ஆத்மி புகாா்

SCROLL FOR NEXT