விஜய் ஹசாரே கோப்பை இறுதிச்சுற்றில் தமிழக அணியை 60 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் ஆகியுள்ளது கர்நாடக அணி.
பெங்களூரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கர்நாடக அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. தமிழக அணி 49.5 ஓவர்களில் 252 ரன்கள் எடுத்தது. அபினவ் முகுந்த் 85 ரன்களிலும் பாபா அபரஜித் 66 ரன்களிலும் ஆட்டமிழந்தார்கள். கடைசி ஓவரில் மிதுன் ஹாட்ரிக் விக்கெட்டுகள் எடுத்தார். கர்நாடக அணித் தரப்பில் மிதுன் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
இதன்பிறகு விளையாடிய கர்நாடக அணி, சிறப்பாக விளையாடியது. தேவ்தத் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு ஜோடி சேர்ந்த ராகுலும் மயங்க் அகர்வாலும் நிலைத்து நின்று விளையாடினார்கள். மயங்க் அகர்வால் 40 பந்துகளில் 49 ரன்களும் ராகுல் 35 ரன்களும் எடுத்தார்கள். கர்நாடக அணி, 17 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 107 ரன்கள் எடுத்திருந்த நிலையில் வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. பிறகு மழை பெய்ய ஆரம்பித்தது. இதனால் ஆட்டத்தைத் தொடர முடியாமல் போனது. விஜேடி முறைப்படி 23 ஓவர்களின் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 87 ரன்கள் எடுத்தால் போதும் என்கிற நிலையில் கர்நாடக அணி 107 ரன்கள் எடுத்திருந்தது. இதனால் விஜய் ஹசாரே கோப்பை இறுதிச்சுற்றில் 60 ரன்கள் வித்தியாசத்தில் கர்நாடக அணி வென்றதாக அறிவிக்கப்பட்டது.
இந்த வருட விஜய் ஹசாரே கோப்பைப் போட்டியில் இறுதிச்சுற்று வரை ஒரு ஆட்டத்திலும் தோல்வியடையாத தமிழக அணி, கடைசிக்கட்டத்தில் தோற்றதால் கோப்பையை வெல்ல முடியாமல் போய்விட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.