டெஸ்ட் கிரிக்கெட்டில், அதிகவேக 50 டிஸ்மிஸல்களைக் கொண்ட இந்திய விக்கெட் கீப்பர் என்கிற பெருமையை அடைந்துள்ளார் ரிஷப் பந்த்.
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 2-வது டெஸ்டில், நேற்று, கிரைக் பிராத்வெயிட்டின் கேட்சைப் பிடித்தார் ரிஷப் பந்த். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவருடைய 50-வது டிஸ்மிஸல் இது. இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில், அதிகவேக 50 டிஸ்மிஸல்களைக் கொண்ட இந்திய விக்கெட் கீப்பர் என்கிற பெருமையை ரிஷப் பந்த் அடைந்துள்ளார்.
இதற்கு முன்பு, இந்தச் சாதனையைத் தக்கவைத்திருந்தவர் தோனி. ஆனால் அவருக்கு 15 டெஸ்டுகள் தேவைப்பட்டன.
டெஸ்ட்: குறைந்த டெஸ்டுகளில் 50 டிஸ்மிஸல்கள்
10 மார்க் பெளசர்
10 ஜானி பேர்ஸ்டோவ்
10 டிம் பெயின்
11 கில்கிறிஸ்ட்
11 ரிஷப் பந்த்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.