செய்திகள்

இரு வெற்றிகளில் 19-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை நெருங்கவுள்ள நடால்!

ஞாயிறன்று நடைபெறவுள்ள யு.எஸ். ஓபன் இறுதிச்சுற்றை வெல்லும் வீரருக்கு ரூ. 27.66 கோடி பரிசுத்தொகை கிடைக்கும்.

எழில்

மூன்று நாள்களில் இரு மிகச்சிறந்த வீரர்கள் யு.எஸ். ஓபன் போட்டியிலிருந்து வெளியேறிவிட்டார்கள். மீதமுள்ள ஒரு சாம்பியனாவது ரசிகர்களுக்கு நம்பிக்கை தரவேண்டும் அல்லவா!

யு.எஸ். ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார் ரஃபேல் நடால். 

நியூயார்க் நகரில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் 6-4, 7-5, 6-2 என்கிற நேர் செட்களில் டிகோ ஸ்வார்ட்ஸ்மேனைத் தோற்கடித்துள்ளார் நடால். அரையிறுதியில் இத்தாலியின் 23 வயது மாட்டோ பெர்ரெட்டினியைச் சந்திக்கவுள்ளார். இன்னும் இரு வெற்றிகள் பெற்றால் 19-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றுவிடுவார் நடால். இதன்மூலம் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களுடன் உள்ள ஃபெடரரின் சாதனைக்கு அருகில் நெருங்குவார். 

ஞாயிறன்று நடைபெறவுள்ள யு.எஸ். ஓபன் இறுதிச்சுற்றை வெல்லும் வீரருக்கு ரூ. 27.66 கோடி பரிசுத்தொகை கிடைக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கவினின் கிஸ் பட டிரைலர்!

முதல் டி20 போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு!

ரவி மோகன் இயக்கும் முதல் படம்: புரோமோ தேதி அறிவிப்பு!

ரூ. 30,000 கோடி சொத்தில் பங்கு வேண்டும்: கரிஷ்மா கபூரின் வாரிசுகள் வழக்கு!

சினிமா காதலி... த்ரிஷா!

SCROLL FOR NEXT