செய்திகள்

உலக மல்யுத்த சாம்பியன் போட்டி இன்று தொடக்கம்: பஜ்ரங், வினேஷ் போகட் மீது எதிர்பார்ப்பு

கஜகஸ்தானின் நுர்-சுல்தான் நகரில் சனிக்கிழமை உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள் தொடங்குகின்றன. இதில் இந்திய நட்சத்திர வீரர்கள்

DIN


கஜகஸ்தானின் நுர்-சுல்தான் நகரில் சனிக்கிழமை உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள் தொடங்குகின்றன. இதில் இந்திய நட்சத்திர வீரர்கள் பஜ்ரங், வினேஷ் போகட் தங்கப் பதக்கம் வெல்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.
மல்யுத்தத்தில் உயர்ந்தபட்ச போட்டியான உலக சாம்பியன்ஷிப் நுர்-சுல்தான் நகரில் நடக்கிறது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இந்த போட்டி 2020 ஒலிம்பிக் போட்டி தகுதிச் சுற்றாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மகளிர் பிரிவில் வினேஷ் போகட் 50 கிலோ பிரிவில் இருந்து 53 கிலோ பிரிவுக்கு இடம் மாறி விட்டார். வினேஷ் போகட்டும் 3 போட்டிகளில் தங்கம் வென்றுள்ளார். அதே நேரம்   ஆடவர் பிரிவில் நட்சத்திர வீரர் பஜ்ரங் நிகழாண்டு நடைபெற்ற 4 சர்வதேச போட்டிகளிலும் 65 கிலோ பிரிவில் தங்கம் வென்றார். 
6 நிமிடங்கள் எதிராளியை உடும்பு பிடியாக வைத்திருப்பது மிகவும் கடினமானது என வினேஷ் தெரிவித்தார். 2 முறை உலகப் போட்டியில் பதக்கம் வென்ற சுஷில் குமார்.  மகளிர் பிரிவில் சாக்ஷி மாலிக்கின் ஆட்டத்திறனும் கேள்வியை  எழுப்பியுள்ளது. இந்த போட்டியில் 6 ஒலிம்பிக் தகுதி இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பள்ளி, குடியிருப்புப் பகுதியில் திரியும் குரங்குகளை அப்புறப்படுத்தக் கோரிக்கை

கந்தா்வகோட்டையில் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி தொடக்கம்

விராலிமலையில் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் தொடக்கம்

நவ.17-இல் அஞ்சல் ஆயுள் காப்பீட்டு முகவா் பணிக்கான நோ்காணல்

சந்திரமெளலீஸ்வரா் கோயில் குடமுழுக்கு

SCROLL FOR NEXT