செய்திகள்

பிசிசிஐ தேர்தல்கள் : சிஓஏ உத்தரவுக்கு 4 மாநிலங்கள் இணங்கவில்லை

பிசிசிஐ நிர்வாகிகள் தேர்தல் விவகாரத்தில் சிஓஏ உத்தரவுக்கு இணங்காமல்  தமிழகம் உள்ளிட்ட 4 மாநில சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன.

DIN


பிசிசிஐ நிர்வாகிகள் தேர்தல் விவகாரத்தில் சிஓஏ உத்தரவுக்கு இணங்காமல்  தமிழகம் உள்ளிட்ட 4 மாநில சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன.
உச்சநீதிமன்ற உத்தரவின்படி பிசிசிஐ நிர்வாகத்தை வினோத் ராய் தலைமையிலான கிரிக்கெட் நிர்வாகக் குழு சிஓஏ மேற்கொண்டு வருகிறது. வரும் அக்டோபர் 22-ஆம் தேதி பிசிசிஐக்கு புதிய நிர்வாகிகள் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து மாநில சங்கங்களும் செப். 12-ஆம் தேதி தங்கள் நிர்வாகிகள் தேர்தலை நடத்த சிஓஏ உத்தரவிட்டிருந்தது. பல்வேறு மாநில சங்கங்கள் இதில் மெத்தனப்போக்கை கடைபிடித்த நிலையில், கால அவகாசத்தை 28-ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது சிஓஏ.
நீதிபதி லோதா குழு பரிந்துரைகளின்படி உச்சநீதிமன்றம் அங்கீகாரம் அளித்த புதிய சட்டவரையறையின்படி பிசிசிஐ, மாநில சங்க தேர்தல்கள் நடைபெறுகின்றன.
இதுதொடர்பாக சிஓஏ வினோத் ராய் கூறியதாவது: மொத்தமுள்ள 38 சங்கங்களில் கடந்த வாரம் வரை 7 சங்கங்கள் எங்கள் அறிவிப்பை ஏற்காமல் செயல்பட்டன. தற்போது கர்நாடகம், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநில சங்கங்கள் தங்கள் நிர்வாகிகள் தேர்தலை நடத்த உள்ளன. மேலும் ஹரியாணா,தமிழகம், உத்தரகாண்ட், அருணாசலப்பிரதேசம் போன்றவை சிஓஏ உத்தரவை ஏற்காமல் உள்ளன.
ஹரியாணா, தமிழ்நாடு சங்கங்களில் இருந்து எவரும் எங்களை அணுகவில்லை. மாநில, பிசிசிஐ நிர்வாகிகள் தேர்தல் விவகாரம் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்றார் ராய்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிரம்ப் வருகைக்கு எதிராக லண்டனில் போராட்டம்!

முதல் டி20: இருவர் அரைசதம் விளாசல்; இங்கிலாந்துக்கு 197 ரன்கள் இலக்கு!

பிரதமர் மோடிக்கு ரஷிய அதிபர் பிறந்தநாள் வாழ்த்து!

மோடி பிறந்த நாளுக்கு மெஸ்ஸி பரிசு..! காரணமாக இருந்தவர் யார்?

இரவில் 26 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

SCROLL FOR NEXT