செய்திகள்

உலக குத்துச்சண்டை போட்டி: அமித் பங்கால் அபாரம்

உலக ஆடவர் குத்துச்சண்டை சாம்பியன் போட்டியில் இந்திய நட்சத்திர வீரரும், ஆசிய சாம்பியனுமான அமித் பங்கால் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

DIN

உலக ஆடவர் குத்துச்சண்டை சாம்பியன் போட்டியில் இந்திய நட்சத்திர வீரரும், ஆசிய சாம்பியனுமான அமித் பங்கால் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
ரஷியாவின் எகடெரின்பர்க் நகரில் நடைபெறும் இப்போட்டியில் 50-க்கு மேற்பட்ட நாடுகளில் இருந்து 300 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இந்தியாவும் இப்போட்டிக்கு வலுவான அணியை அனுப்பியுள்ளது. ஆசியப் போட்டி சாம்பியன் அமித் பங்கால் 52 கிலோ பிரிவில் சீன தைபேயின் டு போ வெயை 5-0 என்ற புள்ளிக் கணக்கில் எளிதாக வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றார்.
23 வயதான அமித் தொடக்கம் முதலே ஆட்டம் முழுவதும் ஆதிக்கம் செலுத்தி சரமாரியாக குத்துகளை விட்டார். முதல் சுற்றில் அமித்துக்கு பை வழங்கப்பட்டது.
57-63 கிலோ பிரிவில் இந்திய வீரர் மணிஷ் கெளஷிக் 5-0 என்ற புள்ளிக் கணக்கில் டச்சு வீரர் லாக்ரûஸ வீழ்த்தி நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகர ராசியா நீங்க? தினப்பலன்கள்!

‘கேடிசி நகரிலிருந்து ரயில் நிலையத்துக்கு பேருந்து வசதி தேவை’

இளம்பெண் தற்கொலை கோட்டாட்சியா் விசாரணை

வன்னிக்கோனேந்தல், கல்லூா் வட்டாரங்களில் இன்று மின்தடை

லாரி மீது பைக் மோதி இளைஞா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT