ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரின் 5-ஆவது டெஸ்டில் 135 ரன்கள் வித்தியாசத்தில் வென்று 2-2 என தொடரையும் சமன் செய்தது இங்கிலாந்து.
இரு அணிகளுக்கு இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட ஆஷஸ் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்றது. ஆஸி. 2 ஆட்டத்திலும் இங்கிலாந்து 1 ஆட்டத்திலும் வென்றன. ஒரு ஆட்டம் டிராவில் முடிந்தது. ஆஷஸ் கோப்பையை ஆஸ்திரேலியா கைப்பற்றிய நிலையில், இறுதி டெஸ்ட் ஆட்டம் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது.
கடைசி இன்னிங்ஸில், 399 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலிய அணி, 77 ஓவர்களில் 263 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்த வெற்றி மூலம் தொடரையும் 2-2 என சமன் செய்தது இங்கிலாந்து. தொடர் நாயகனாக ஸ்மித்தும், ஆட்ட நாயகனாக ஆர்ச்சரும் தேர்வு பெற்றனர்.
இந்த ஆஷஸ் தொடரில் 4 டெஸ்டுகளில் பங்கேற்ற ஸ்மித், 774 ரன்கள் எடுத்து கவாஸ்கரின் சாதனையைச் சமன் செய்துள்ளார். கவாஸ்கர் தனது முதல் தொடரிலேயே பலம் வாய்ந்த மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக 774 ரன்கள் குவித்தார்.
ஒரு தொடரில் 4 டெஸ்ட்டுகளில் அதிக ரன்கள் எடுத்தவர்கள்
829 - விவ் ரிச்சர்ட்ஸ் (1976)
774 - சுனில் கவாஸ்கர் (1971)
774 - ஸ்டீவ் ஸ்மித் (2019)
769 - ஸ்டீவ் ஸ்மித் (2014/15)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.