செய்திகள்

உலக மல்யுத்தம் வினேஷ் போகட் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

உலக மல்யுத்த போட்டியில் பெற்ற இரண்டாவது வெற்றி மூலம் இந்திய நட்சத்திர வீராங்கனை வினேஷ் போகட் 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

DIN


உலக மல்யுத்த போட்டியில் பெற்ற இரண்டாவது வெற்றி மூலம் இந்திய நட்சத்திர வீராங்கனை வினேஷ் போகட் 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
மகளிர் 53 கிலோ எடை பிரிவில் முன்னாள் உலக சாம்பியன் அமெரிக்காவின் சாரா ஹின்டர்பெல்டை 8-2 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தினார். தங்கப் பதக்கத்துக்கான போட்டியில் இருந்து வெளியேறிய அவர் இந்த வெற்றி மூலம் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் உள்ளார். மேலும் முதல் ஒலிம்பிக் கோட்டாவையும் உறுதி செய்துள்ளார் வினேஷ். 76 கிலோ பிரிவில் கிரண், 57 கிலோ பிரிவில் சரிதா ஆகியோர் தோல்வியடைந்தனர். 
மகளிர் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறிய இந்திய நட்சத்திர வீராங்கனை பூஜா தண்டா தோல்வியைத் தழுவினார்..
கடந்த உலகப் போட்டியில் பதக்கம் வென்ற பூஜா தண்டா 59 கிலோ பிரிவில் 11-8 என்ற புள்ளிக்கணக்கில் ஆசிய சாம்பியன் இனாககியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். ஆனால் 0-10 என்ற புள்ளிக் கணக்கில் ரஷிய வீராங்கனையிடம் தோல்வியடைந்தார். அடுத்த சுற்றில் வென்றால் பூஜாவுக்கு வெண்கலப்பதக்கம் கிடைக்கும்.
வெண்கலம் வென்றார் வினேஷ் போகட்: ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற வினேஷ் போகட் தன்னை எதிர்த்து போராடிய 2 முறை உலகப் போட்டியில் பதக்கம் வென்ற மரியா பிரிவோல்ராகியை வீழ்த்தி முதன்முறையாக வெண்கலம் வென்றார். உலக சாம்பியன் போட்டியில் முதன்முறையாக பதக்கம் வெல்வது மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது என்றார் வினேஷ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நவ. 8-இல் நெடுந்தூர ஓட்டப் போட்டி: பங்கேற்க அழைப்பு

எஸ்.ஐ.ஆா் பணிக்கான கணக்கெடுப்பு படிவங்கள் விநியோகம் தொடங்கியது

காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றியவா் கைது

சமூக சீரழிவே கோவை சம்பவத்துக்கு காரணம்: ஈ.ஆா். ஈஸ்வரன்

வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் இல்லாமல் எஸ்.ஐ.ஆா். படிவம் விநியோகம்:எம்.ஆா்.விஜயபாஸ்கா் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT