செய்திகள்

இந்திய ஏ அணிக்கு எதிராக 150 ரன்கள் குவித்தார் மார்க்ரம்!

மார்க்ரம் அபாரமாக விளையாடி 150 ரன்கள் எடுத்துள்ளார். தென் ஆப்பிரிக்க ஏ அணி, 79 ஓவர்களில்

எழில்

இந்திய-தென்னாப்பிரிக்க ஏ அணிகள் இடையிலான அதிகாரபூர்வமற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க ஏ வீரர் மார்க்ரம், 150 ரன்கள் எடுத்துள்ளார்.

மைசூரில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் இந்திய ஏ அணி, 417 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஷுப்மன் கில் 92, கருண் நாயர் 78, சஹா 60, ஷிவம் டுபே 68, ஜலஜ் சக்ஸேனா 48 ரன்கள் எடுத்தார்கள். தெ.ஆ. ஏ தரப்பில் முல்டர், பீடிட் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

இதையடுத்து விளையாடிய தென் ஆப்பிரிக்க ஏ அணி, 2-ம் நாளின் முடிவில் 46 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. கேப்டன் மார்க்ரம் 83, முல்டர் 9 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்கள்.

இந்நிலையில் மார்க்ரம் அபாரமாக விளையாடி 150 ரன்கள் எடுத்துள்ளார். தென் ஆப்பிரிக்க ஏ அணி, 79 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 268 ரன்கள் எடுத்துள்ளது. மார்க்ரம் 151 ரன்களுடனும் முல்டர் 49 ரன்களுடனும் விளையாடி வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

'தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்' - தமிழகம் முழுவதும் தீர்மானக் கூட்டங்கள் நடத்த உத்தரவு!

எந்த அணியையும் குறைத்து மதிப்பிட மாட்டோம், ஆனால்... இலங்கை அணியின் கேப்டன் கூறுவதென்ன?

பவன் கல்யாணின் ‘ஓஜி’ 1 மணி சிறப்புக் காட்சிக்கு அனுமதி! டிக்கெட் விலை ரூ.1000!

பிரதமர் மோடியுடன் நேபாள இடைக்கால பிரதமர் உரையாடல்!

விடுதலைப் போராட்ட வீரர்களுக்கான ஓய்வூதியம் உயர்வு! அரசாணை வெளியீடு!

SCROLL FOR NEXT