செய்திகள்

உலக ஆடவர் குத்துச்சண்டை: இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார் இந்தியாவின் அமித் பங்கால்!

உலக ஆடவர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியின் அரையிறுதியில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார் இந்தியாவின் அமித் பங்கால்.

எழில்

உலக ஆடவர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியின் அரையிறுதியில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார் இந்தியாவின் அமித் பங்கால்.

ரஷியாவில் நடைபெற்று வரும் இப்போட்டியில் ஆசிய சாம்பியன் அமித் பங்கால் 52 கிலோ பிரிவின் அரையிறுதியில் 3-2 என்ற புள்ளிக் கணக்கில் கஸகஸ்தானைச் சேர்ந்த சகன் பிபோஸ்ஸினோவை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றார். இதன்மூலம், உலக ஆடவர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்ற முதல் இந்தியர் என்கிற பெருமையை அவர் பெற்றுள்ளார். 

எனினும் மற்றொரு அரையிறுதிச் சுற்றில் பங்கேற்ற இந்தியாவின் மணிஷ் கெளஷிக், 63 கிலோ பிரிவில் கியூபாவைச் சேர்ந்த உலக சாம்பியன் ஆண்டி கிரஸிடம் 0-5 என்கிற புள்ளிக்கணக்கில் தோல்வியடைந்துள்ளார், 

உலகக் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் இந்தியா இதுவரை 4 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது. இந்தமுறை முதல்முறையாக அமித் பங்கால் தயவால் தங்கமோ வெள்ளியோ கிடைக்கவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒரே மாதத்தில் 3 பேர் தீக்குளித்து தற்கொலை!

வந்தாளே அல்லிப்பூ... சிம்ரன் கௌர்!

ரிசர்வ் வங்கியின் கொள்கை நாளில் சரிவை கண்ட சென்செக்ஸ், நிஃப்டி!

பாகிஸ்தான் அதிபராகும் ராணுவத் தலைமைத் தளபதி? ராணுவம் விளக்கம்!

சிராஜிக்கு எதிராக விளையாடுவது சவாலானது: மொயின் அலி

SCROLL FOR NEXT