செய்திகள்

தெ.ஆ. டெஸ்ட் தொடர்: காயம் காரணமாக பும்ரா விலகல்!

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து வேகப்பந்துவீச்சாளர் பும்ரா விலகியுள்ளார்.

எழில்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து வேகப்பந்துவீச்சாளர் பும்ரா விலகியுள்ளார். இதையடுத்து அவருக்குப் பதிலாக உமேஷ் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஐசிசி சார்பில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. 2 ஆண்டுகள் நடைபெறும் இப்போட்டியில் 9 நாடுகள் பங்கேற்று 72 ஆட்டங்களில் மோதுகின்றன. இந்தியா ஏற்கெனவே 2-0 என மே.இ.தீவுகளை வென்று 120 புள்ளிகளைப் பெற்றுள்ளது. இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர், அக்டோபர் 2 அன்று விசாகப்பட்டினத்தில் தொடங்குகிறது.

இந்நிலையில் காயம் காரணமாக டெஸ்ட் தொடரிலிருந்து ஜஸ்பிரித் பும்ரா விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக உமேஷ் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 2018 முதல் உமேஷ் யாதவ் 5 டெஸ்டுகளில் மட்டுமே விளையாடியுள்ளார். இதனால் அவர் மீண்டும் இந்திய அணியில் தனக்கான இடத்தைத் தக்கவைக்க இது நல்ல வாய்ப்பாகப் பார்க்கப்படுகிறது.  

இந்திய டெஸ்ட் அணி: விராட் கோலி (கேப்டன்), மயங்க் அகர்வால், ரோஹித் சர்மா, புஜாரா, ரஹானே, விஹாரி, ரிஷப் பந்த், சஹா, அஸ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவ், ஷமி, இஷாந்த் சர்மா, ஷுப்மன் கில், உமேஷ் யாதவ். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜார்க்கண்ட் கல்வி அமைச்சர் ராம்தாஸ் சோரன் காலமானார்

உடன்பாடு எட்டப்படவில்லை-டிரம்ப்; புரிதல் ஏற்பட்டுள்ளது - புதின்!

டிரம்ப் - புதின் இடையே 3 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தை! ஆனால்..

சப்தமே இல்லாமல் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய ஸ்விக்கி!

அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

SCROLL FOR NEXT