செய்திகள்

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவராக என். சீனிவாசனின் மகள் ரூபா குருநாத் தேர்வு!

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவராக என். சீனிவாசனின் மகள் ரூபா குருநாத் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

எழில்

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவராக என். சீனிவாசனின் மகள் ரூபா குருநாத் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

பிசிசிஐ நிர்வாகிகள் தேர்தல் வரும் அக்டோபர் 22-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், செப்டம்பர் 24-ஆம் தேதிக்குள் மாநில சங்க நிர்வாகிகள் தேர்தல் நடைபெற வேண்டும் என சிஓஏ அறிவுறுத்தியிருந்தது. 

இந்நிலையில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் (டிஎன்சிஏ) புதிய தலைவராக என். சீனிவாசனின் மகள் ரூபா குருநாத் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். இன்று நடைபெற்ற டிஎன்சிஏ ஆண்டு நிர்வாகக் கூட்டத்தில் இது தொடர்பான அறிவிப்பு வெளியானது. போட்டியின்றித் தேர்வான ரூபா குருநாத், பிசிசிஐ மாநில கிரிக்கெட் சங்கங்களின் முதல் பெண் தலைவர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார். 

டிஎன்சிஏ தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ரூபாவின் கணவர் குருநாத் மெய்யப்பன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை நிர்வாகியாக செயல்பட்டார். கடந்த 2013 ஐபிஎல் சீசனில் ஸ்பாட் பிக்ஸிங், பெட்டிங் புகார் காரணமாக அவருக்கு பிசிசிஐ வாழ்நாள் தடை விதித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரயில் கட்டணம் உயர்வு! டிச. 26 முதல் அமல்!

கோவையில் லாரி ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! 4 கார்கள் மீது மோதி விபத்து

“யாரும் யாருக்கும் பணம் கொடுக்கவில்லை!” நேஷனல் ஹெரால்டு வழக்கு குறித்து ப. சிதம்பரம்

இந்திய சினிமாவிலேயே பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா!

டெஸ்ட்டில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய நியூசி. வீரர் டெவான் கான்வே!

SCROLL FOR NEXT