செய்திகள்

மகளிர் ஹாக்கி டெஸ்ட்: பிரிட்டனை வீழ்த்தியது இந்தியா

DIN

மகளிர் ஹாக்கி டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டத்தில் பலம் வாய்ந்த பிரிட்டனை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது இந்தியா.
மகளிர் அணி பிரிட்டனில் 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது.
இதன் முதல் ஆட்டம் மார்லோவில் நடைபெற்றது. ஆட்டம் தொடங்கியது முதல் பிரிட்டனே ஆதிக்கம் செலுத்தியது. 46-ஆவது நிமிடத்தில் அதன் வீராங்கனை எமிலி டிபிரண்ட் முதல் கோலடித்தார், இரண்டாவது பாதியில் இந்திய வீராங்கனை ஷர்மிளா தேவி அடித்த கோலால் 1-1 என சமநிலை ஏற்பட்டது.
இறுதியில் ஆட்டம் டிராவில் முடிவடையும் எனக் கருதப்பட்ட நிலையில் குர்ஜித் கெளர், 48 விநாடிகள் இருக்கும் போது, அடித்த அற்புத கோலால் இந்தியா முன்னிலை பெற்று 2-1 என வெற்றி பெற்றது.
ஆடவர் ஹாக்கி அணி அபாரம்:ஸ்பெயினுக்கு எதிராக ஆன்ட்வெர்பில் சனிக்கிழமை நடைபெற்ற ஆடவர் ஹாக்கி தொடரில் 6-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது இந்தியா. ஹர்மன்ப்ரீத் சிங் 2, மன்ப்ரீத் சிங், நிலகண்ட சர்மா, மந்தீப் சிங், ரூபிந்தர் பால் சிங் தலா 1 கோலை அடித்தனர். ஸ்பெயின் உலகில் 8-ஆம் நிலை அணியாகும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கைப்பேசி திருடிய கும்பலுடன் மோதல்: மும்பை காவலா் விஷ ஊசி செலுத்தி கொலை

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் வழக்கு: தொல்லியல் துறைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

மத சுதந்திர மீறல்கள் குறித்த அமெரிக்க ஆணைய அறிக்கை: இந்தியா கண்டனம்

திருச்செந்தூா் விரைவு ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு?

இலஞ்சி பாரத் பள்ளியில் உழைப்பாளா் தின கொண்டாட்டம்

SCROLL FOR NEXT