நன்றி: பிசிசிஐ டிவிட்டர் 
செய்திகள்

இந்தியா-தென் ஆப்பிரிக்கா 3-வது டி20: மழையால் ஆட்டம் கைவிடப்பட்டது

இந்தியா, தென் ஆப்பிரிக்கா மகளிர் அணிகளுக்கிடையிலான 3-வது டி20 ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. 

DIN


இந்தியா, தென் ஆப்பிரிக்கா மகளிர் அணிகளுக்கிடையிலான 3-வது டி20 ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. 

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க மகளிர் கிரிக்கெட் அணி 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. 

இதில், முதல் டி20 ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. 2-வது டி20 ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. 

இந்நிலையில், 3-வது டி20 இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7 மணிக்கு தொடங்கவிருந்தது. ஆனால், காலை பெய்த மழையால், ஆட்டம் தொடங்குவதற்கு முன்பு வரை மைதானத்தில் ஈரப்பதம் இருந்தது. இதனால், இந்த ஆட்டம் ஒரு பந்துகூட வீசாத நிலையில் கைவிடப்பட்டது. 

இதன்மூலம், 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இரு அணிகளுக்கிடையிலான கடைசி 2 டி20 ஆட்டங்கள் முறையே அக்டோபர் 1 மற்றும் 4 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆஷஸ்: 5 விக்கெட்டுகளை அள்ளிய ஸ்டார்க்! ஜோ ரூட், கிராவ்லி டக்-அவுட்.. இங்கிலாந்து திணறல்!

கரூரில் கோயில் நில மீட்பு விவகாரம்: ஜோதிமணி, எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது வழக்கு

ஆளுநருக்கு காலக்கெடு நிர்ணயிக்கும் வரை ஓயமாட்டோம்: முதல்வர் ஸ்டாலின்

தங்கம் விலை நிலவரம்: பவுனுக்கு எவ்வளவு குறைந்து தெரியுமா?

கோடீஸ்வரர் ஆனாரா மிடில் கிளாஸ்? - திரை விமர்சனம்

SCROLL FOR NEXT