கரோனா நிவாரணத்துக்கு மேலும் ரூ. 50 லட்சம் வழங்கினார் கெளதம் கம்பீர்
கரோனா தடுப்புப் பணிகளுக்காக தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தில்லி அரசுக்கு மேலும் ரூ. 50 லட்சம் வழங்கியுள்ளார் முன்னாள் வீரர் கெளதம் கம்பீர்.
கரோனா தடுப்புப் பணிகளுக்காக தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தில்லி அரசுக்கு மேலும் ரூ. 50 லட்சம் வழங்கியுள்ளார் முன்னாள் வீரர் கெளதம் கம்பீர்.
சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் பரவியுள்ள இந்த வைரஸால் இதுவரை 69,000-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 4,200 பேருக்கு மேல் இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த வாரம், கரோனா தடுப்புப் பணிகளுக்காகத் தனது இரண்டு வருட சம்பளத்தை பிரதமர் நிவாரண நிதிக்கு வழங்கினார் முன்னாள் வீரரும் கிழக்கு தில்லி எம்.பி.-யுமான கெளதம் கம்பீர். இந்நிலையில் மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்காக தில்லி அரசுக்கு தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 50 லட்சம் வழங்கியுள்ளார். இரு வாரங்களுக்கு ரூ. 50 லட்சம் வழங்கினேன். தற்போது மீண்டும் ரூ. 50 லட்சத்தை மேம்பாட்டு நிதியிலிருந்து தில்லி அரசுக்கு வழங்குகிறேன் என்று கம்பீர் கூறியுள்ளார்.