செய்திகள்

சிறந்த ஆஃப் ஸ்பின்னர் அஸ்வின் அல்ல, லயன்: பிராட் ஹாக்

சிறந்த ஆஃப் ஸ்பின்னர் என்கிற பெயரை அஸ்வினிடமிருந்து நாதன் லயன் எடுத்துக்கொண்டு விட்டார் என ஆஸி. முன்னாள் வீரர் பிராட் ஹாக் கூறியுள்ளார்.

DIN

சிறந்த ஆஃப் ஸ்பின்னர் என்கிற பெயரை அஸ்வினிடமிருந்து நாதன் லயன் எடுத்துக்கொண்டு விட்டார் என ஆஸி. முன்னாள் வீரர் பிராட் ஹாக் கூறியுள்ளார்.

ட்விட்டரில் ரசிகர் ஒருவருக்கு அவர் பதில் அளித்ததாவது:

கடந்த வருடத்திலிருந்து சிறந்த ஆஃப் ஸ்பின்னருக்கான பட்டத்தை அஸ்வினிடமிருந்து நாதன் லயன் பெற்றுக்கொண்டார் என நினைக்கிறேன். இருவரும் சிறப்பாகத் தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்கள் என்று கூறியுள்ளார்.

இதுவரை 71 டெஸ்டுகளில் விளையாடியுள்ள அஸ்வின், 365 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். லயன், 96 டெஸ்டுகளில் விளையாடி 390 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

லயனை விடவும் அஸ்வின் அதிக ஒருநாள், டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 111 ஒருநாள், 46 டி20 ஆட்டங்களில் விளையாடி முறையே 150, 52 விக்கெட்டுகளை எடுத்துள்ளார் அஸ்வின். 29 ஒருநாள், 2 டி20 ஆட்டங்களில் விளையாடி முறையே 29, 1 விக்கெட்டுகளை எடுத்துள்ளார் லயன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்க வரி விதிப்பு தீர்ப்பு எதிரொலி: சென்செக்ஸ் 479.95 புள்ளிகள் உயர்வு!

த்ரிஷ்யம் - 3 மோகன்லால் போஸ்டர்!

தவெக வார்டு செயலாளர்... தாய் கிழவி டிரைலர்!

முடிந்த ஓராண்டிற்குள் மீண்டும் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடர்!

தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு! பேசியது என்ன?

SCROLL FOR NEXT