செய்திகள்

பிசிசிஐ துணைத் தலைவர் பதவியை ராஜிநாமா செய்த மஹிம் வர்மா

DIN

பிசிசிஐ கிரிக்கெட் அமைப்பின் துணைத் தலைவரான மஹிம் வர்மா தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

கடந்த வருடம் பிசிசிஐ தலைவராக கங்குலி நியமிக்கப்பட்டபோது துணைத் தலைவராகப் பதவியேற்றார் மஹிம் வர்மா.

இந்நிலையில் உத்தரகண்ட் கிரிக்கெட் சங்கத்தின் தேர்தலில் வென்று செயலாளர் பதவிக்குத் தேர்வாகியுள்ளார் மஹிம் வர்மா. இதனால் வேறுவழியின்றி பிசிசிஐ துணைத் தலைவர் பதவியை ராஜிநாமா செய்யவேண்டிய நிலைமைக்கு ஆளாகியுள்ளார். பிசிசிஐ விதிமுறைகளின்படி ஒரு நபர் இரு பதவிகளில் பணிபுரியக் கூடாது.

ஒழுங்கீனமான நிர்வாகத்தால் பாதிப்புக்கு ஆளாகியிருக்கும் என்னுடைய மாநில கிரிக்கெட் சங்கத்தைச் சரிப்படுத்தவேண்டும். எனவே எனது பிசிசிஐ துணைத் தலைவர் பதவியை ராஜிநாமா செய்துள்ளேன். கடிதத்தைத் தலைமைச் செயல் அதிகாரி ராகுல் ஜோரியிடம் வழங்கியுள்ளேன். என்னுடைய ராஜிநாமா ஏற்றுக்கொள்ளப்படும் என நம்புகிறேன் என்று மஹிம் வர்மா கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலத்தில் சூறைக்காற்று: 4 ஆயிரம் வாழைகள் சாய்ந்து சேதம்!

காஃப்காவின் வாசகி!

தி.நகர் மேம்பாலத்தில் டிசம்பருக்கு பின் போக்குவரத்துக்கு அனுமதி?

முக்கிய கட்டத்தில் விசாரணை: கவிதாவின் காவல் மேலும் நீட்டிப்பு!

ஜார்கண்டில் தொடரும் சோதனை: மேலும் ரூ. 1.5 கோடி பறிமுதல்

SCROLL FOR NEXT