முகப்பு
செய்திகள்

உலகப் புகழ்பெற்ற கோல் கீப்பர் ஓய்வு

ஸ்பெயின் அணியைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற கோல் கீப்பரான கசில்லாஸ் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

Updated On : 5 ஆகஸ்ட், 2020 at 12:00 PM
படம் - ஏஎஃப்பி
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:34 PM

ஸ்பெயின் அணியைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற கோல் கீப்பரான கசில்லாஸ் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

2010-ல் ஸ்பெயின் அணி கசில்லாஸ் தலைமையில் முதல்முறையாக உலகக் கோப்பையை வென்றது. ஸ்பெயின் அணி 2008, 2012-ல் ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டிகளையும் வெல்லவும் கசில்லாஸ் உதவினார். ஸ்பெயின் அணிக்காக 167 சர்வதேச ஆட்டங்களில் விளையாடியுள்ளார். ரியல் மேட்ரிட் கிளப் அணிக்காக 725 ஆட்டங்களில் பங்கேற்றுள்ளார். 

கடந்த வருடம் பயிற்சியின்போது கசில்லாஸுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதற்குப் பிறகு கால்பந்து ஆட்டங்களில் பங்கேற்கவில்லை. இந்நிலையில் தற்போது ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.