முகப்பு
செய்திகள்

சதமடித்த மசூத்: சரிவிலிருந்து மீண்டது பாகிஸ்தான்

​இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர் ஷான் மசூத் சதமடித்து அணியை சரிவிலிருந்து மீட்டுள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:04 PM
​இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர் ஷான் மசூத் சதமடித்து அணியை சரிவிலிருந்து மீட்டுள்ளார்.
பகிர்:


இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர் ஷான் மசூத் சதமடித்து அணியை சரிவிலிருந்து மீட்டுள்ளார்.

இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இதன்படி முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய பாகிஸ்தான் அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்கள் எடுத்திருந்தது. பாபர் அசாம் 69 ரன்களுடனும், ஷான் மசூத் 46 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய முதல் ஓவரிலேயே அசாம் 69 ரன்களுக்கு ஆண்டர்சன் பந்தில் ஆட்டமிழந்தார். இதைப் பயன்படுத்திய இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

ஆசாத் ஷபிக் 7 ரன்களுக்கு பிராட் பந்திலும், முகமது ரிஸ்வான் 9 ரன்களுக்கு வோக்ஸ் பந்திலும் ஆட்டமிழந்தனர்.

ஆசாத் ஷபிக் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் பிராட் மற்றும் இங்கிலாந்து வீரர்கள்..

இதன் காரணமாக பாகிஸ்தான் அணி 176 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

இந்த நிலையில், அரைசதம் அடித்து விளையாடி வந்த மசூத்துடன் ஷதாப் கான் இணைந்தார். இந்த இணை சிறப்பான பாட்னர்ஷிப்பை அமைத்து அணியை சரிவிலிருந்து மீட்டது.

பந்தை எதிர்கொள்ளும் ஷதாப் கான்..

ஷதாப் கான் ஒத்துழைப்பு தர, தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த மசூத் சதத்தை எட்டினார்.

சதமடித்த மகிழ்ச்சியில் மசூத்..

இந்த இணை 6-வது விக்கெட்டுக்கு 105 ரன்கள் சேர்த்த நிலையில், ஷதாப் கான் 45 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இந்த பாட்னர்ஷிப்பைப் பிரித்த பிறகும், இங்கிலாந்து அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தியது.

யாசிர் ஷா (5 ரன்கள்), முகமது அபாஸ் (0) ஆகியோரை அடுத்தடுத்த பந்தில் ஆட்டமிழக்கச் செய்தார் ஆர்ச்சர்.

அபாஸ் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் ஆர்ச்சர்..

விக்கெட்டுகள் சரிந்தபோதிலும் தொடக்க ஆட்டக்காரர் மசூத் பொறுப்புடன் விளையாடி 150 ரன்களைக் கடந்தார். அதேசமயம் அணியையும் 300 ரன்களைக் கடக்கச் செய்தார்.

பிராட் வீசிய பந்து மசூத்தின் முழங்கையை தாக்கியது..

2-வது நாள் ஆட்டம் தேநீர் இடைவேளையில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 312 ரன்கள் எடுத்துள்ளது. மசூத் 151 ரன்களுடனும், ஷகீன் அப்ரிடி 1 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

இங்கிலாந்து தரப்பில் ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளையும், வோக்ஸ் 2 விக்கெட்டுகளையும், ஆண்டர்சன், பிராட் மற்றும் பெஸ் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தியுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →