முகப்பு
செய்திகள்

2-வது டெஸ்ட்: 4-வது நாள் ஆட்டமும் மழையால் பாதிப்பு

​இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் ஆட்டத்தின் 4-வது நாள் ஆட்டமும் மழையால் பாதிக்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:08 PM
புகைப்படம்: ஐசிசி | ட்விட்டர்
பகிர்:


இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் ஆட்டத்தின் 4-வது நாள் ஆட்டமும் மழையால் பாதிக்கப்பட்டது.

இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் ஆட்டம் சௌதாம்ப்டனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இதன்படி, முதலில் பேட்டிங் செய்த அந்த அணி 236 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதைத் தொடர்ந்து, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்தது. முதல் ஓவரிலேயே தொடக்க ஆட்டக்காரர் ரோரி பர்ன்ஸ் ரன் ஏதும் எடுக்காமல் அப்ரிடி பந்தில் ஆட்டமிழந்தார். எனினும், மீண்டும் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபட்டது. இங்கிலாந்து அணி 5 ஓவர்கள் மட்டுமே பேட்டிங் செய்தது. அதன்பிறகு, தொடர்ந்து மழை நீடித்ததால், மீண்டும் ஆட்டம் தொடங்கவே இல்லை. 4-ம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து 1 விக்கெட்டை இழந்து 7 ரன்கள் எடுத்து, முதல் இன்னிங்ஸில் 229 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது. இன்றைய ஆட்டத்தில் வெறும் 10.2 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டன.

இந்த ஆட்டத்தில் நாளை ஒருநாள் மட்டுமே மீதமுள்ளதால், பெரும்பாலும் டிராவில் முடியவே வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →